For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக சந்தையில் 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உணவுப் பொருட்களின் விலை சரிவு

By Siva
Google Oneindia Tamil News

ரோம்: உலக சந்தையில் உணவுப் பொருட்களின் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் இறைச்சியை தவிர பிற உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளது என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. பால் மற்றும் சர்க்கரையின் விலையும் தொடர்ந்து குறைந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது உணவு பொருட்களின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

World food prices dip to 4-year low in September: FAO

மேலும் இந்த ஆண்டில் தானிய விளைச்சல் 2.523 பில்லியன் டன்னாக இருக்கும் என அந்த அமைப்பு கணித்துள்ளது. இது கடந்த மே மாத கணிப்பை விட 65 மில்லியன் டன் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர 2015ம் ஆண்டின் இறுதியில் உலக தானிய சேமிப்பு 627.5 மில்லியன் டன்னாக இருக்கும் என்று அந்த அமைப்பு கணித்துள்ளது. இந்த ஆண்டு கோதுமையின் விளைச்சலும் புதிய சாதனை படைக்கும் அளவுக்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

English summary
UN's food agency said that world food prices dip to four year low in september.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X