For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'செகண்ட் வேவ்' வரும்.. பேராபத்து இன்னமும் இருக்கிறது.. உலக சுகாதார அமைப்பு முக்கிய அலர்ட்

Google Oneindia Tamil News

ஜெனிவா: கொரோனா நோய்த்தொற்றுகள் குறைந்து வருவதைக் காணும் நாடுகள் அந்த நோயை தடுக்கும் நடவடிக்கைகளை உடனே கைவிட்டுவிட்டால், "உடனடியான இரண்டாவது முறையாக" தொற்றை எதிர்கொள்ளக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ரஷ்யா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி. இந்தியா, இங்கிலாந்து, உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா, ஆஸ்திரேலியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் நோயின் தாக்கம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து அந்த நாடுகள் வெளியேறி வருகின்றன. பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்காக தடுப்பு நடவடிக்கைகளை கைவிட்டு வழக்கமான வாழ்க்கை முறைக்கு பல நாடுகள் மாறி வருகின்றன.

 ஒரு பக்கம் அர்ச்சகர்கள்.. இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள்.. தேடி தேடி உதவிய திமுகவின் அன்பில் மகேஷ்! ஒரு பக்கம் அர்ச்சகர்கள்.. இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள்.. தேடி தேடி உதவிய திமுகவின் அன்பில் மகேஷ்!

கைவிட்டால் வரும்

கைவிட்டால் வரும்

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் அவசர நிலை தலைவர் டாக்டர் மைக்ரியான் ஒரு ஆன்லைன் கருத்தரங்கில் கூறுகையில், : கொரோனா நோய்த்தொற்றுகள் குறைந்து வருவதைக் காணும் நாடுகள் அந்த நோயை தடுக்கும் நடவடிக்கைகளை உடனே கைவிட்டுவிட்டால், "உடனடியான செகண்ட் வேவ்வை" எதிர்கொள்ளக்கூடும்.

பாதிப்பு அதிகம் எங்கு

பாதிப்பு அதிகம் எங்கு

கொரோனா பரவலின் முதல் அலைக்கு நடுவே உலகம் இன்னும் உள்ளது, பல நாடுகளில் பாதிப்பு குறைந்து கொண்டே இருக்கும் நிலையில். மத்திய மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா.மற்றும் தெற்காசியா நாடுகளில் வேகமாக அதிகரித்து வருகின்றது. கொரோனா தொற்று நோய் பெரும்பாலும் 2வது முறையாக பரவி வருகிறது முதல் வேவ் தணிந்த இடங்களில் இந்த ஆண்டு இறுதியில் தொற்றுகள் மீண்டும் வரக்கூடும். முதல் வேவ்வை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மிக விரைவில் நீக்கப்பட்டால், தொற்று விகிதங்கள் மீண்டும் விரைவாக உயர வாய்ப்புள்ளது.

எப்போது வேண்டுமானாலும் வரும்

எப்போது வேண்டுமானாலும் வரும்

செகண்ட் வேவ் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கொரோனா ​​நோயின் முதல் அலை தொடர்ந்து இருப்பதை நாம் புரிந்து கொண்டிருப்போம். சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் பரவக்கூடும். பல நாடுகளில் மீண்டும் பரவுவது ஒரு யதார்த்தமாக ஒன்றாக இருக்க கூடும்.ஆனால் இந்த நோய் எந்த நேரத்திலும் உயரக்கூடும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நோய் குறைந்து கொண்டே இருப்பதால் இப்போது அது தொடர்ந்து குறைய போகிறது என்ற அனுமானங்களை நாம் செய்ய முடியாது. இரண்டாவது அலைக்குத் தயாராக இருக்க வேண்டும். .இரண்டாவது அலையில் மீண்டும் உச்சம் பெறக்கூடும்.

யுக்தி திட்டங்கள்

யுக்தி திட்டங்கள்

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள நாடுகள் பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகள், கண்காணிப்பு நடவடிக்கைகள், சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு தொடர்ந்து செய்வதை உறுதி செய்வதற்கான ஒரு விரிவான யுக்தி சார்ந்த திட்டங்களை உருவாக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மட்டுமே செகண்ட் வேவ்வால் உடனடியாக ஆபத்து ஏற்படாமல் தடுக்க முடியும்" இவ்வாறு கூறினார்.

Recommended Video

    WHO Says, We Will Have To Learn To Live With Coronavirus
    பொருளாதாரத்தை காப்பாற்ற

    பொருளாதாரத்தை காப்பாற்ற

    பல ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவில் உள்ள பல மாநிலங்களும் சமீபத்திய வாரங்களில் நோய் பரவுவதைத் தடுத்து வந்த போதிலும் பொருளாதாரங்களுக்கு கடுமையான தீங்கு விளைவிக்கும் லாக்டவுன் நடவடிக்கைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளன. இந்தியாவும் லாக்டவுன் தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஜப்பான் அண்மையில் லாக்டவுனை தளர்த்தியது. சிங்கப்பூர் ஜுன் மாதம் தளர்த்த போகிறது.

    English summary
    The World Health Organization on Monday warned that countries seeing a decline in COVID-19 infections could still face an "immediate second peak" if they let up too soon on measures to halt the outbreak.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X