For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரணத்திலும் உலக நாடுகளின் தலைவர்களை ஒருங்கிணைத்த மண்டேலா

By Siva
Google Oneindia Tamil News

ஜொஹன்னஸ்பர்க்: முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் 90 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கு நேற்று நடந்தது. ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள எப்.என்.பி. அரங்கில் நினைவு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் 90 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பிரணாப் முகர்ஜி

பிரணாப் முகர்ஜி

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நினைவு கூட்டத்தில் கலந்து கொண்டு மறைந்த மண்டேலா பற்றி உரை நிகழ்த்தினார்.

சோனியா காந்தி

சோனியா காந்தி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மண்டேலா நினைவு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கர்சாய்

கர்சாய்

ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயும், பிரணாப் முகர்ஜியும் கையைப் பிடித்துக் கொண்டு சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர்.

உலக தலைவர்கள்

உலக தலைவர்கள்

மண்டேலாவின் நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

ஜேக்கப் ஜுமா

ஜேக்கப் ஜுமா

நினைவு கூட்டத்தில் பேச வந்த தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமாவை பார்த்து அரங்கில் இருந்த பொது மக்கள் ஊ என்று கத்தினர். பலர் ஜுமா பேசுகையில் அரங்கில் இருந்து வெளியேறினர்.

ஒபாமா

ஒபாமா

கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மண்டேலாவை புகழ்ந்து பேசினார். வரலாற்றின் மாபெரும் மனிதர் மண்டேலா என்று புகழாரம் சூட்டினார்.

காஸ்ட்ரோ

காஸ்ட்ரோ

கூட்டத்திற்கு வந்திருந்த கியூபா அதிபர் ரவூல் காஸ்ட்ரோவை சந்தித்து அவருடன் கை குலுக்கினார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

English summary
Leaders from 90 countries and South Africans paid tribute to the former South African president Nelson Mandela at a memorial service in Johannesburg on tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X