For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேட்டீங்களா இதை.. ரோமியோவுக்கு ஒரு வழியாக ஜோடி கிடைச்சிருச்சாம்

உலகின் தனித்து வாழும் தவளை என்று அழைக்கப்படும் பொலிவிய தவளைக்கு ஜோடி கிடைத்துள்ளதாம்.

By Hema Vandana
Google Oneindia Tamil News

லா பாஸ்/பொலிவியா: பொலிவியா நாட்டில் ஒரு கலகலப்பான சம்பவம் நடந்துள்ளது. அதாவது அந்த நாட்டைச் சேர்ந்த ரோமியோ என்று பெயரிடப்பட்ட தவளைக்கு பெண் தவளை ஒன்று ஜோடியாக கிடைத்து விட்டதாம். இந்தத் தவளை பொலிவிய மக்களிடம் ரொம்பப் பிரபலமானது என்பது சுவாரஸ்யமானது. நீண்ட நாட்களாக இது தனித்து வசித்து வந்ததால் பொலிவியர்கள் கவலையில் இருந்து வந்தனர். தற்போது அதற்கு ஜோடி கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனராம்.

இதை விட பெரிய சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த ரோமியோ தவளைக்கு ஜோடி தேடுவதற்காக தனியாக ஒரு இயக்கமே நடத்தி வந்தனர் பொலிவியர்கள். இதற்காக 15,000 டாலர் அளவுக்கு நிதி சேகரிப்பும் நடந்தது. ஆனால் எதிர்பார்த்ததை விட கூடுதலாக 25,000 டாலர் நிதி சேர்ந்து விட்டது.

வழக்கமான நீர்த் தவளைகள் வாழும் காலத்தை விட குறைந்த வாழ்நாளே வாழப் போகிறது இந்த ரோமியோ தவளை. அதாவது இன்னும் ஐந்து ஆண்டுகள்தான் இது வாழவுள்ளது. எனவேதான் பொலிவிய மக்கள் இந்தத் தவளை கூடுதல் மீது பிரியம் காட்டி வருகின்றனர். எனவேதான் இதன் வாழ்நாள் முடிவதற்குள் எப்படியும் ஜோடி தேடி பிடித்து விட வேண்டும் என்று அதிக அக்கறையும் காட்டினர்.

தனிமையில் தவித்த தவளை

தனிமையில் தவித்த தவளை

அமெரிக்காவின் டெக்ஸாஸைச் சேர்ந்த குளோபல் வைல்ட்லைப் கன்சர்வேசன் என்ற அமைப்பு இதற்காக ஆன்லைன் மூலமாகவும் ஜோடி தவளையைத் தேடி வந்தது. உலகெங்கிலும் இதன் மூலம் ரோமியோ பிரபலமானது. உலகிலேயே தனித்து வாழும் ஒரே தவளை என்ற பெயரும் இதற்குக் கிடைத்தது.

ரோமியோவுக்கு ஜூலியட் கிடைத்தார்

ரோமியோவுக்கு ஜூலியட் கிடைத்தார்

இந்த நிலையில் தற்போது ரோமியோவுக்கு ஜோடி தவளை கிடைத்து விட்டதாக இந்த ஜோடி தேடும் படலத்தில் ஈடுபட்டு வரும் அமைப்பின் நிறுவனரான ஆர்ச்சுரோ முனோஸ் கூறியுள்ளார். தற்போது பொலிவியாவில் உள்ள இயற்கை வரலாறு மியூசியத்தில் வசித்து வருகிறது. இருப்பினும் ஜோடி யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. விரைவில் அந்த நல்ல செய்தி வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார் முனோஸ்.

32 நாடுகளிலிருந்து உதவி

32 நாடுகளிலிருந்து உதவி

#Match4Romeo என்று ஹேஷ்டேக் போட்டு ஜோடி தவளை தேடும் படலம் நடந்து வந்தது. இதுவரை இந்த தேடுதலுக்காக 32 நாடுகளிலிருந்து பெருமளவில் நிதி குவிந்துள்ளதாம். தற்போது சேர்ந்துள்ள பணத்தை வைத்து ரோமியோ இதுவரை வசித்த இடங்களுக்கெல்லாம் அதைக் கூட்டிச் சென்று அதன் ஜோடியுடன் சந்தோஷமாக வசிக்க வைக்க திட்டமிட்டுள்ளனராம்.

அனைத்து வசதிகளும் தயார்

அனைத்து வசதிகளும் தயார்

மேலும் ரோமியோ மற்றும் அதன் ஜோடிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் திட்டமும் தீட்டப்பட்டுள்ளதாம். கிழக்கு ஆண்டீஸ் வனப் பகுதியில் உள்ள சில இடங்களையும் கூட இதற்காக தேர்வு செய்துள்ளனராம்.

பிறந்தால் ரோமியோ தவளையாக பிறந்திருக்கலாம் போல.

English summary
World's lonely Frog Romeo has got its parit at last. This frog is living in Bolivia and expecting its death in another 5 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X