For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சியோலில் சர்வதேச ஜோதிட கருத்தரங்கம்- 'தட்ஸ் தமிழ்' ஜோதிடர் சுப்ரமணியம் பங்கேற்கிறார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சியோல்: தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற உள்ள ஜோதிட கருத்தரங்கத்தில் நமது தமிழ் ஒன் இந்தியாவின் ஜோதிடர் டாக்டர் கே.ஆர். சுப்ரமணியன் பங்கேற்று வாஸ்து சாஸ்திரம் பற்றி உரை நிகழ்த்த இருக்கிறார். வரும் 21ம் தேதி நடைபெறும் இந்த கருத்தரங்கத்தில் பங்கேற்க நாளைய தினம் சென்னையில் இருந்து தென் கொரியாவிற்கு பயணிக்கிறார் ஜோதிடர் கே.ஆர். சுப்ரமணியன்.

யுனிவர்சிட்டி ஆஃப் ப்ரெயின் எஜூகேசன் சார்பில் வரும் 21ம் தேதி தென்கொரிய தலைநகர் சியோலில் உலக புங்ஸூ கருத்தரங்கம் ( World Pungsu Symposium)நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கத்தில் உலகத்தில் உள்ள மிக முக்கிய ஜோதிடர்களும் பேராசிரியர்களும் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக ஜோதிட பேராசிரியரும் சப்தரிஷி ஜோதிட அறிவியல் பயிற்சி மற்றும் ஆராய்சி மையத்தின் நிறுவனருமான டாக்டர். கே.ஆர்.சுப்ரமணியன் பங்கேற்று ' இந்தியாவில் வாஸ்து சாஸ்திரத்தின் பங்கு' (Role of Vastu Sastra in India) என்ற தலைப்பில் தனது ஆய்வு கட்டுரையை சமர்பித்து உரையாற்ற இருக்கிறார். டாக்டர் கே.ஆர். சுப்ரமணியன் நமது இணைய தளத்தில் ஜோதிட கட்டுரைகளை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கருத்தரங்கத்தில் நேபாள நாட்டின் பாரம்பரிய வாஸ்து சாஸ்திரம் பற்றி சுதர்சன் ராஜ் திவாரி என்பவரும், கொரிய புங்ஸூ ப்ரெயின் எஜூகேசன் பல்கலைக்கழக பேராசிரியரும், உரையாற்ற உள்ளனர். இலங்கையின் வாஸ்து சாஸ்திரம் பற்றி அந்நாட்டு ஜோதிட பேராசியரியரும், ஈரான் நாட்டு ஜோதிடம் வாஸ்து சாஸ்திரம் பற்றி பேராசிரியர்களும் உரையாற்ற உள்ளனர். இந்த கருத்தரங்கத்தில் பல நாட்டு ஜோதிட வல்லுநர்களும் பங்கேற்று உரை நிகழ்த்த இருக்கின்றனர்.

English summary
World Pungsu Symposium will be hold on November 21, 2015. 1:00 PM. at International Conference Hall, Global Center B/D, SEOUL. University of Brain Education host and organization the program. Dr. K.R.Subramanian submit the article and explain the Role of Vastu Sastra in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X