For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த ரஷ்யா.. புடின் முக்கிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

மாஸ்கோ: கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்கும் போட்டிகளுக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார், இது உலகின் முதல் தடுப்பூசி என்று கூறப்படுகிறது.

Recommended Video

    World’s First Covid-19 Vaccine will be Registered by Russia | Oneidia Tamil

    உலகெங்கிலும் கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்பு விகிதங்கள் கடுமையாக உயர்ந்து வருகிறது. அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது பெரிய கொரோனா பாதிப்புக்கு உள்ளான நாடாக ரஷ்யா உள்ளது.

    இந்நிலையில் கொரோனா தடுப்பூசி பந்தயத்தில் உலகின் அனைத்து நாடுகளையும் முந்த விரும்பிய ரஷ்யா, இன்று ( ஆகஸ்ட் 12 ஆம் தேதி) க்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் வெளியிட்ட உலகின் முதல் நாடாக பதிவு செய்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின் இதை செய்தியாளர்களிடம் முறைப்படி இன்று அறிவித்தார்.

    இந்த தடுப்பூசியை முதலில் போடுங்க.. எந்த வைரஸும் கிட்ட நெருங்காது.. அட்வைஸ் தரும் டாக்டர்கள் இந்த தடுப்பூசியை முதலில் போடுங்க.. எந்த வைரஸும் கிட்ட நெருங்காது.. அட்வைஸ் தரும் டாக்டர்கள்

    அக்டோபரில் பயன்பாடு

    அக்டோபரில் பயன்பாடு

    ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசி சோதனை கட்டமாக பொதுமக்களுக்கு இன்று முதல் போடப்படுகிறது. மருத்துவ வல்லுநர்கள் மற்றும் முதியவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட உள்ளது..அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்தப்பட்ட பின்னர் தடுப்பூசியின் செயல்திறன் தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் அக்டோபரில் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஏற்கனவே ரஷ்யா கூறியிருந்தது.

    புடின் அறிவிப்பு

    புடின் அறிவிப்பு

    இந்நிலையில் கொரோனோவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளோம் என ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் தனது சொந்த மகளுக்கே புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் புடின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

    திறம்பட செயல்படுகிறது

    திறம்பட செயல்படுகிறது

    சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோவிடம் தடுப்பூசி குறித்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்ட புடின். "இது மிகவும் திறம்பட செயல்படுகிறது" என்பதும், "நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது" என்பதும் தனக்குத் தெரியும் என்றார்.

    முக்கியமான படி

    முக்கியமான படி

    "இன்று காலை, உலகில் முதல் முறையாக, புதிய கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி பதிவு செய்யப்பட்டது" என்று கூறிய புடின், கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் தடுப்பூசியில் பணியாற்றிய அனைவருக்கு நன்றி தெரிவித்தார், மேலும் இது "உலகிற்கான மிக முக்கியமான படி" என்று விவரித்தார்.

    English summary
    Russia's president Putin has announced the registration of the first coronavirus vaccine. Putin says his own daughter has been vaccinated with new coronavirus vaccine
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X