For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனது மகளுக்கே இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. முதல் கொரோனா தடுப்பூசி குறித்து ரஷ்யா அதிபர்!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், அந்த தடுப்பூசி ரஷ்ய அதிபர் புடினின் மகளுக்கும் போடப்பட்டுள்ளது. இந்த தகவலை அதிபர் விளாடிமிர புடினே இன்று வீடியோ கான்பிரன்சில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Recommended Video

    World’s First Covid-19 Vaccine will be Registered by Russia | Oneidia Tamil

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இதுவரை 2 கோடி பேரை பாதித்துள்ளது. சுமார் 7.32 லட்சம் பேர் வரை இறந்துள்ளார்கள். ஒவ்வொரு நாளும் 2 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு மருந்து கண்டுபிடிக்க உலகமே போராடி வருகிறது.

    இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்த ரஷ்யா, அதன் மருத்துவ சோதனையை ஜூன் 18 அன்று தொடங்கியது 38 தன்னார்வலர்களுக்கு பரிசோதித்தது. . அனைத்து பங்கேற்பாளர்களும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாக கூறியது.. தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் குழுவினர் ஜூலை 15 ம் தேதியும், இரண்டாவது குழுவினர் ஜூலை 20 ம் தேதியும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த ரஷ்யா.. புடின் முக்கிய அறிவிப்புஉலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த ரஷ்யா.. புடின் முக்கிய அறிவிப்பு

    முதல் தடுப்பூசி

    முதல் தடுப்பூசி

    இதையடுத்து ஆய்வுகள் தொடர்ந்த ரஷ்யா, உலகின் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்ய விரும்பியது. இதை கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஊடகங்களிடம் அந்நாட்டு சுகாதார இணையமைச்சர் ஒலெக் கிரிட்னேவ் அறிவித்து இருந்தார்.

    தடுப்பூசி போட்ட புடின் மகள்

    தடுப்பூசி போட்ட புடின் மகள்

    இதன்படி ரஷ்ய அதிபர் புடின் முதல் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்தார். இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்து வைத்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த புடின் , உடல் நிலை சரியில்லாமல் உள்ள தனது இரண்டு மகள்களில் ஒருவருக்கு இத்தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறினார்.

    60 சதவீதம் பேருக்கு

    60 சதவீதம் பேருக்கு

    தடுப்பூசிகள் பதிவுசெய்யப்பட்ட பின்னர் காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரஷ்யர்களில் 60% வரை காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும் என்று சுகாதார இணையமைச்சர் ஒலெக் கிரிட்னேவ் முன்பு கூறியிருந்தார்.

    இப்போது யாருக்கு மட்டும்

    இப்போது யாருக்கு மட்டும்

    அக்டோபரில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படலாம் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகம் முன்னர் கூறியிருந்தது. சுகாதார அமைச்சர் முராஷ்கோ மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார குழுவினருக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறியிருந்தார். எனவே இன்று முதல் சோதனை முறையில் தடுப்பூசி போடப்படுகிறது.

    English summary
    Putin emphasized that the vaccine underwent the necessary tests. He added that one of his two daughters has received a shot of the vaccine and is feeling well, according to Associated Press reports.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X