For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்ல செய்தி.. இன்னும் 48 மணி நேரத்தில் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை வெளியிடுகிறது ரஷ்யா

Google Oneindia Tamil News

மாஸ்கோ: உலகின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 12 அன்று ரஷ்யா வெளியிட உள்ளதாக அந்நாட்டின் துணை சுகாதார அமைச்சர் முராஷ்கோ தெரிவித்தார். இன்னும் 48 மணி நேரத்தில் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா வெளியிட உள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

Recommended Video

    World’s First Covid-19 Vaccine will be Registered by Russia | Oneidia Tamil

    உலகெங்கிலும் கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்பு விகிதங்கள் திடீரென அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் வைரஸ் தொற்று 8,77,135 பேருக்கு பரவி இருக்கிறது. அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது பெரிய கொரோனா பாதிப்புக்கு உள்ளான நாடாக உள்ளது - இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் நோயாளிகளை கொண்ட நான்கு நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.

    இந்நிலையில் கொரோனா தடுப்பூசி பந்தயத்தில் உலகின் அனைத்து நாடுகளையும் முந்த விரும்பும் ரஷ்யா , ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் முழுமையான பயனுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பதிவு செய்யும் உலகின் முதல் நாடாக மாறப்போகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தி

    நோய் எதிர்ப்பு சக்தி

    ஸ்பூட்னிக் செய்தியின்படி, யுஃபாவில் ஒரு புற்றுநோய் மைய கட்டிடத்தை திறந்து வைத்து ​​கிரிட்நேவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது, ​​இறுதி கட்டம் நடந்து வருகிறது. சோதனை மிகவும் முக்கியமானது. தடுப்பூசி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவ வல்லுநர்கள் மற்றும் முதியவர்கள் முதலில் தடுப்பூசி போடுவார்கள்.அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்தப்பட்ட பின்னர் தடுப்பூசியின் செயல்திறன் தீர்மானிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

    கோவிட் தடுப்பூசி நிலை

    கோவிட் தடுப்பூசி நிலை

    ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் முந்தைய அறிக்கையில், கமலேயாவில் உள்ள ரஷ்யாவின் கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பூசியை இறுதிகட்டமாக பரிசோதித்த அனைத்து தன்னார்வலர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைக் காட்டியது என்று கூறியது.

    கோவிட் தடுப்பூசி நிலை

    கோவிட் தடுப்பூசி நிலை

    ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் முந்தைய அறிக்கையில், கமலேயாவில் உள்ள ரஷ்யாவின் கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பூசியை இறுதிகட்டமாக பரிசோதித்த அனைத்து தன்னார்வலர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைக் காட்டியது என்று கூறியது.

    ரஷ்யாவில் தடுப்பூசி

    ரஷ்யாவில் தடுப்பூசி

    ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளின் இறுதி கட்டத்தை முடித்துவிட்டதாகவும், விரிவான செயல்திறனைக் காட்டியதாகவும் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அரசாங்கம் முதலில் முதியவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் ஆகஸ்ட் மாதத்தில் தடுப்பூசி போடும் என்றும் பின்னர் அக்டோபரில் நாடு தழுவிய தடுப்பூசி பிரச்சாரத்தை தொடங்கும் என்றும் கூறினார்.

    இரு குழுவுக்கு சோதனை

    இரு குழுவுக்கு சோதனை

    ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியின் மருத்துவ சோதனை ஜூன் 18 அன்று தொடங்கியது 38 தன்னார்வலர்களுக்கு பரிசோதித்தது. . அனைத்து பங்கேற்பாளர்களும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாக கூறப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் குழுவினர் ஜூலை 15 ம் தேதியும், இரண்டாவது குழுவினர் ஜூலை 20 ம் தேதியும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    பக்க விளைவு இல்லை

    பக்க விளைவு இல்லை

    இதன்பின்னர் வெக்டர் மாநில ஆராய்ச்சி மையமான வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி உருவாக்கிய இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும், தடுப்பூசியால் பக்க விளைவுகள் எதுவும் காணப்படவில்லை என்றும் எந்த சிக்கல்களும் கண்டறியப்படவில்லை என்றும் ரஷ்யா அறிவித்தது.

    கொரோனா தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி

    எனவே , ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஒரு முழுமையான கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பதிவுசெய்த உலகின் முதல் நாடாக ரஷ்யா மாறுகிறது. ரஷ்ய சுகாதார இணை அமைச்சர் கைல் முராஷ்கோ, கொரோனா வைரஸ் தடுப்பூசியை அக்டோபரில பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிவித்தார்.

    முழு சோதனை முக்கியம்

    முழு சோதனை முக்கியம்

    அதே நேரத்தில், COVID-19 தடுப்பூசியை விரைவாகத் தொடங்குவதற்கான திட்டங்களை ரஷ்யா அறிவித்த பின்னர், உலக சுகாதார அமைப்பு (WHO) ரஷ்யாவை திறமையான மற்றும் பாதுகாப்பான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான நிறுவப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியது. சோதனையின் இறுதிகட்டத்தில் உள்ள அனைத்து தடுப்பூசிகளும் மக்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்னர் முழு சோதனை செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது . ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்களிடம் உலகசுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியர் இந்த தகவலை கூறினார்.

    English summary
    In the COVID-19 vaccine race, Russia is all set to become the first country in the world to register a fully effective coronavirus vaccine by August 12. Russian Health Minister Mikhail Murashko said that the government will first vaccinate teachers and doctors in August and then launch a nationwide vaccination campaign in October.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X