For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவைத்தில் பதிவானதா உலகின் உச்சபட்ச வெப்பநிலை.! என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம்

Google Oneindia Tamil News

Recommended Video

    உலகின் உச்சபட்ச வெப்பநிலை! என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம் |temp. is 48 degrees Celsius in Delhi

    குவைத்: இந்தியாவில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 45 முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இதனை தூக்கி சாப்பிடும் விதமாக தற்போது குவைத்தில் 63 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வெளியான தகவல் அதிர வைத்துள்ளது.

    தற்போதைய நிலரவப்படி வளைகுடா நாடுகளான குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் சர்வதேச அளவில் இதுவரை பதிவான வெப்பநிலை அளவுகளை எல்லாம் உடைத்தெறியும் விதமாக, உக்கிரமான உச்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது.

    Worlds highest temperature ever recorded in Kuwait What the International Weather Center Says

    உலகின் மிக உயர்ந்த வெப்பநிலையை குவைத் நகரத்தில் கடந்த வாரம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. நேரடி சூரிய ஒளியில் 63 டிகிரி செல்சியஸ் அளவும், நிழல்களின் கீழ் 52.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குவைத் நகரில் பதிவானதாக, அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதே போல சவுதி அரேபியாவிலும் கிட்டத்தட்ட 55 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

    வாவ்! சென்னை மக்களே!.. 22-ஆம் தேதி மழை பெய்ய போகிறது.. நார்வேயிலிருந்து நல்ல செய்தி வந்திருக்கு!வாவ்! சென்னை மக்களே!.. 22-ஆம் தேதி மழை பெய்ய போகிறது.. நார்வேயிலிருந்து நல்ல செய்தி வந்திருக்கு!

    நம் நாட்டை பொறுத்த வரையில் கடந்த 2016-ல் மே 19ம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் பலோடி பகுதியில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதே அதிகபட்ச வெப்பநிலையாக உள்ளது.

    குவைத் மற்றும் சவுதி அரேபியா இரண்டுமே மிக கடுமையான வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அரேபிய வானிலை வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளிலும் மிக கடுமையான வெப்ப அலை பரவியுள்ளதாக கூறியுள்ளது.

    63 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ள குவைத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன் வெயில் கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வானிலை நிபுணர்கள் வட இந்தியா, குறிப்பாக டெல்லி, குவைத் மற்றும் சவுதி அரேபியா போல போல வெ்பநிலையில் மோசமாக செல்லாது. எனினும் வடஇந்திய மக்கள் தங்களை தொடர் வெப்ப அலைகளிலிருந்து பாதுகாக்க, தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.

    இந்நிலையில் குவைத்தில் பதிவானதாக கூறப்படும் 63 டிகிரி செல்சியஸ் மற்றும் சவுதி அரேபியாவில் பதிவானதாக கூறப்படும் 55 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு தொடர்பாக, சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் கருத்து தெரிவித்துள்ளது. மேற்கண்ட இரு இடங்களில் பதிவானதாக கூறப்படும் வெப்பநிலை குறித்து உரிய ஆய்வு நடத்த உள்ளதாக கூறியுள்ளது.

    இந்த ஆய்விற்கு பின்னரே உலகின் அதிகபட்ச வெப்பநிலை குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் பதிவானதா என்பதை உறுதியாக அறிவிக்க முடியும் என்று சர்வதேச வானிலை மையம் கூறியுள்ளது.

    English summary
    In India, the temperature is between 45 and 48 degrees Celsius in Delhi and Rajasthan. According to reports, Kuwait is currently experiencing temperatures of up to 63 degrees Celsius.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X