For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3,607.4 மீ உயரத்தில் உலகின் மிக உயரமான சுரங்க ரயில் பாதை... சீனாவில் திறப்பு

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: உலகின் மிக உயரமான ரயில் சுரங்கப்பாதை ஒன்று நேற்று சீனாவில் திறக்கப்பட்டது.

இந்த நிமிடத்தில் உலகில் உள்ள மிக உயரமான ரயில் சுரங்கப் பாதை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமேற்கு சீனாவில் உள்ள கன்சு மற்றும் ஜின்ஜியாங் மாகாணங்களுக்கிடையே இந்த சுரங்கப் பாதையை அமைத்துள்ளனர்.

அதி வேக ரயில் பாதை...

அதி வேக ரயில் பாதை...

லன்ஸின் என்ற பெயரில் அதிவேக ரயில் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 1,776 கி.மீ. ஆகும்.

மலைகளுக்கு இடையே...

மலைகளுக்கு இடையே...

இதில் சுமார் 16.3 கி.மீ. தூரம் கிலியான் மலைகளுக்கிடையே சுரங்கப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.

உயரம் 3607.4 மீட்டர்...

உயரம் 3607.4 மீட்டர்...

இந்த சுரங்கப்பாதை 3,607.4 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் உயரமான சுரங்கப் பாதை...

உலகின் உயரமான சுரங்கப் பாதை...

இதன் மூலம் உலகின் மிகவும் உயரமான ரயில் சுரங்கப்பாதை என்ற பெருமையை இந்தச் சுரங்கப்பாதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சுரங்கப்பாதை நேற்று திறப்பு விழா செய்யப்பட்டது.

2009ல் கட்ட ஆரம்பித்து...

2009ல் கட்ட ஆரம்பித்து...

கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது இதன் கட்டுமான வேலை. இந்தாண்டு கடைசியில் இந்த சுரங்கப்பாதை மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மணிக்கு 200 கி.மீ வேகத்தில் போகலாம்...

மணிக்கு 200 கி.மீ வேகத்தில் போகலாம்...

இந்தப் பாதையில் மணிக்கு சுமார் 200 கிமீவேகத்தில் ரயில்கள் செல்லலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளின் 20 மணி நேர பயண நேரம் மிச்சமாகும்.

English summary
The world’s highest tunnel for high-speed train in northwest China at an altitude of 3607.4 metres became operational on 1 May 2014. The 16.3 km long tunnel links Gansu province and Xinjiang provinces. The tunnel passes through the Qilian Mountains with two sections and bridge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X