"டபுள் டைமண்ட்".. வயசு 6தான்.. சார்லி கொண்டு வந்தது.. நம்பவே முடியலையே.. ஓவர் நைட்டில் உலக பேமஸ்!
எடின்பர்க், ஸ்காட்லாந்து: நம்பவே முடியவில்லை.. ஆனால் உண்மை.. சார்லி கொண்டு வந்த ஆட்டுக்குட்டி.. கொஞ்ச நேரத்தில் வேர்ல்ட் ஃபேமஸ் ஆகிவிட்டது.. அப்படி என்ன அதிசயம்?
ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அங்கு லனார்க் என்ற இடம் உள்ளது.. வழக்கமாகவே ஒவ்வொரு வருஷமும் ஆடுகளை அந்த இடத்தில்தான் ஏலம் விடுவார்கள்.. ஏலம் விடுவதற்கென்ற அந்த இடம் ஃபேமஸ் ஆனது... அந்த வகையில், இந்த முறையும் ஏலம் நடத்தப்பட்டது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சார்லி என்பவர் ஒரு ஆட்டுக்குட்டியை வளர்த்து வந்தார்.. அந்த ஆட்டுக்குட்டி பெயர் "டபுள் டைமண்ட்".. 6 வயசுதான்.. இந்த இதை ஏலத்தில் விற்க கொண்டு வந்திருந்தார். வெறும் 10 ஆயிரம் பவுண்டு என்று நிர்ணயித்து அந்த ஆட்டுக்குட்டியை ஏலத்தில் நிற்க வைத்தார்.
அந்த குட்டியை பார்த்தவர்கள் அத்தனை பேரும் வாயை பிளந்தனர்.. ஆளாளுக்கு நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு ஏலத் தொகையை ஏற்றினர்.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஆட்டின் விலை எங்கோ உச்சத்துக்கு போய்விட்டது.. கடைசியல் 3,65,700 பவுண்டுக்கு அந்த குட்டி ஏலம் போனது.. அதாவது நம்ம ஊர் மதிப்பில் 3.5 கோடி ஆகும்.
அப்படி என்ன அந்த டபுள் டைமண்ட் ஆட்டுக்குட்டி ஸ்பெஷல் தெரியுமா? நெதர்லாந்து அருகிலுள்ள சின்ன தீவை சேர்ந்ததுதான் அந்த குட்டி.. டெக்சல் இனத்தை சேர்ந்ததாம்.. இந்த பகுதியில் மொத்தமும் செம்மறி ஆடுகள்தான் இருக்கும்.
இந்த செம்மறி ஆட்டுக்கு நிறைய புசு புசுவென்று முடிகள் இருக்கும்.. அந்த உரோமங்கள்தான் ஸ்காட்லாந்து நாட்டின் குளிரை தாங்க கூடியவையாகும்.. அதுமட்டுமல்ல, இனவிருத்திக்கு மிக முக்கியமான காரணமே இந்த ஆடுதான்.. அதனால்தான் இப்படி போட்டி போட்டுக் கொண்டு ஏலம் நடந்தது.
டபுள் டைமண்ட்-க்கு இனி வாழ்வுதான்!