• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இவுகதான், உலகிலேயே மிகவும் கவர்ச்சிகரமான பாட்டிகளாம்...!

|

லண்டன்: பேஷன் என்றாலே இளைஞர்கள், இளம் பெண்கள், கவர்ச்சிகரமான மாடல்கள்தான் நினைவுக்கு வருவார்கள்.. ஆனால் 70வயதுகளைத் தாண்டியும் மாடலிங்கில் கலக்கும் சிலரை லண்டனின் சேனல் 4 பட்டியலிட்டுள்ளது.

மினிமம் 75.. மேக்ஸிமம் 91 என்று வயதில் அசரடிக்கிறார்கள் இந்த அழகுப் பாட்டிகள்.

ரோஜா படத்தில் வரும் கவர்ச்சிப் பாட்டிகளைப் போல இல்லாவிட்டாலும் கூட செம க்யூட் இந்த பாட்டிகள். அதிலும் 85 வயதான டேபேன் செல்பி என்பவர்தான் உலகிலேயே மிகவும் வயதான மாடல் அழகியாம். அதை விட இவர்தான் உலகிலேயே மிகவும் கவர்ச்சிகரமான பாட்டியும் கூட என்று சேனல் 4 கூறுகிறது.

ஃபேபுலஸ் பாட்டிகள்

ஃபேபுலஸ் பாட்டிகள்

சேனல் 4 நிறுவனம், Fabulous Fashionistas என்ற பெயரில் ஒரு டாக்குமென்டரியை உருவாக்கியுள்ளது. அதில்தான் இந்த பாட்டி புராணம்.

ஆறு பாட்டிகள்.. அம்சமாக

ஆறு பாட்டிகள்.. அம்சமாக

சும்மா சொல்லக் கூடாது.. இந்தப் படத்தில் இடம் பெறும் ஆறு பாட்டிகளுமே அருமையாக இருக்கிறார்கள். டிரஸ்ஸிங், ஸ்டைல் என அனைத்திலும் கலக்குகிறார்கள்.

வயசா ராசா முக்கியம்...

வயசா ராசா முக்கியம்...

இவர்கள் அத்தனை பேரும் ஒரே குரலில் சொன்ன விஷயம்.. வயசை விட மனசுதான் இளமையாக இருக்க வேண்டும். அந்த வகையில் நாங்கள் என்றென்றும் இளசுகள்தான் என்பதே.

73 வயது ஸூ...

73 வயது ஸூ...

73 வயதான ஸூ கிரிட்ஸ்மென் என்பவர் டிரஸ்ஸிங்கை ஒரு கலை போல ரசித்துச் செய்கிறாராம். நாம் போடும் டிரஸ்ஸில்தான் நம்மை மற்றவர்கள் அடையாளம் காண்பார்கள் என்று கூறுகிறார் இந்த அழகுப் பாட்டி. இவர் வர்த்தக ரீதியாக ஒரு கலைஞராக இருந்தவராம். அடிக்கடி டிரஸ்ஸை மாற்றிக் கொண்டே இருப்பாராம். அதிலும் டிசைனர் டிரஸ்தான் இஷ்டமாம்.

அழகோ அழகு பேரழகு...மிஸ்ஸோனி

அழகோ அழகு பேரழகு...மிஸ்ஸோனி

ரோசிட்டா மிஸ்ஸோனி என்ற 70 வயதுப் பாட்டி இவரை விட பெட்டராக காட்சி தருகிறார். கலர் கலராக வளையல், பென்சன்ட், போல்ட் சிவப்பு நிற பிரேம்ஸ் என்று பின்னி எடுக்கிறார். பேஷன் உலகின் பிதா மகள் என்று கூறும் லெவலுக்கு இவரது கெட்டப் பட்டையைக் கிளப்புகிறது.

91 நாட் அவுட்

91 நாட் அவுட்

ஜீன் பார்க்கர் பேரோனஸ் டிரம்பிங்க்டனுக்கு வயது 91 ஆகிறது. ஆனால் பேஷன் மீதான அவரது காதலுக்கு 19 வயதுக்கு மேல் சொல்லவே முடியாதுங்க... அப்படி ஒரு இளமையான எண்ணம், மனசு இவருக்கு. செம க்யூட்டாக, ஸ்டைலிஷாக இருக்கிறார் ஜீன்.

87 வயசுதான்.. ஆனால்

87 வயசுதான்.. ஆனால்

அடுத்தவர் ஜிலியன் லின். இவருக்கு வயது 87 ஆகிறதாம். ஆனால் அப்படிச் சொல்ல முடியவில்லை. 60 வயதுதான் மதிக்க முடிகிறது. அப்படி ஒரு யங் லுக். மினி ஸ்கர்ட், லெக்கிங் என எது கொடுத்தாலும் பின்னுவாராம். இப்போதும் சின்னப் பசங்க போலத்தான் டிரஸ் போடுகிறாராம். டெய்லி எக்ஸர்சைஸ் செய்து விடுவாராம். வயசாவதை மனதளவில் அனுமதிக்கவே கூடாது தம்பி என்று படு தெம்பாகப் பேசுகிறார் சிரித்தபடி. மேட்டர் என்னவென்றால்.. தன்னை விட 27 வயது குறைவானவரைத்தான் இவர் மணந்திருக்கிறார்.

தன்னம்பிக்கைதான் இவர்களை அழகாக்குகிறது...!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The fashion world might be obsessed with youth but it seems no one has told 75-year-old Jean Woods, who has a trendy Hoxton haircut and loves DMs. Or Daphne Selfe, who, at 85, is the world's oldest model - and one of the most stylish, with a wardrobe cool enough to leave the likes of Cara Delevingne looking on in envy. And they are not alone, as new Channel 4 documentary, Fabulous Fashionistas, reveals. The film follows six spectacularly well-dressed pensioners - none of whom is letting age get in the way of looking stylish.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more