For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணிதத்திற்கான உலகின் உயரிய விருது திருட்டு.. விருதை பெற்ற சில நிமிடங்களில் பேராசிரியரிடம் அபேஸ்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பேராசிரியரின் ஃபீல்ட்ஸ் விருது சில நிமிடங்களில் திருட்டு- வீடியோ

    ரியோ டி ஜெனிரோ: கணித துறையில் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ஃபீல்ட்ஸ் விருதை பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியரின் விருது சில நிமிடங்களில் திருடப்பட்டுள்ளது.

    கனடாவை சேர்ந்தவர் கணிதவியல் மேதை ஜான் சார்லஸ் ஃபீல்ட்ஸ் 1863 முதல் 1932 வரை வாழ்ந்தார். 1924ல் சர்வதேச கணிதவியலாளர்கள் அமைப்பை உருவாக்கிய இவர், கணிதத் துறையில் சாதிப்பவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

    Worlds most prestigious maths medal is stolen

    இதன் அடிப்படையில், கணிதத்தில் சாதனை படைக்கும் 40 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு ஃபீல்ட்ஸ் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருது 4 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது கணிதத்திற்கான நோபல் பரிசு என்று அழைக்கப்படுகிறது.

    விருதை பெற்றவர்களில் ஒருவர் காச்சர் பிர்கார். குர்தீஷ் அகதியான இவர், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பிரேசில் தலைநகர், ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இவருக்கு விருது வழங்கப்பட்டது.

    விருது, செல்போன், பர்ஸ் ஆகியவற்றை ப்ரீப் கேசில் பூட்டி டேபிள் மீது வைத்துவிட்டு காச்சர் பிர்கார், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, ப்ரீப்கேஸ் டேபிளுக்கு கீழே, இருந்தது. ஆனால், விருதைதான் காணவில்லையாம்.

    அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து சோதனை செய்தபோது திருடன் அதை எடுத்து செல்வது தெரியவந்துள்ளது. விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என போலீஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    English summary
    A medal regarded in the world of mathematics has been stolen from a Cambridge professor just half an hour after he was awarded the prize in Rio de Janeiro.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X