For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகிலேயே ரொம்ப வயசான ‘தாத்தா’ பிரேசிலில் கண்டுபிடிப்பு.. வயசு 131 ஆகுதாம்!

Google Oneindia Tamil News

பிரேசில்லா: பிரேசில் நாட்டில் உலகிலேயே அதிக வயதுடன் வாழும் 131 வயது மனிதர் கண்டறியப்பட்டுள்ளார்.

உலகிலேயே உயிருடன் வாழும் அதிக வயதான நபராக ஜப்பானை சேர்ந்த 112 வயது யாசுடரோ கொய்டே கருதப்பட்டு வருகிறார். இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், அவரை விட வயதில் மூத்தவரான ஒருவர் பிரேசில் நாட்டில் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஜோவா...

ஜோவா...

அவரது பெயர் ஜோவா கொயிலோவை டி சூசா ஆகும். இவர் பிரேசில் நாட்டின் கிராமம் ஒன்றில் வாழ்ந்து வருகிறார்.

பிறப்புச் சான்றிதழ்...

பிறப்புச் சான்றிதழ்...

சமூக பாதுகாப்பு ஊழியர் ஒருவர் ஜோவா தான் உலகிலேயே அதிக வயதுடையவர் என்ற உண்மையைக் கண்டு பிடித்தார். இதற்கு ஆதாரமாக அவரது பிறப்புச் சான்றிதழில் 1884 ஆம் ஆண்டு மார்ச் 10 ந்தேதி ஜோவா பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பேத்தியுடன்...

பேத்தியுடன்...

தற்போது 131 வயதாகும் ஜோவா, தனது 69 வயது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இந்தத் தம்பதியுடன் அவர்களது 16 வயது பேத்தியும் வசித்து வருகிறார்.

கின்னஸ் முயற்சி...

ஜோவாவின் வயது உறுதிப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரது பெயரைக் கின்னஸில் இடம்பெறச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

English summary
The Ministry of Social Security in Brazil claims that the oldest man in the world lives in Brazil's remote state of Acre. Named João Coelho de Souzais 131 years old and he has his birth certificate also. Guinness Book of World Record is investigating his case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X