For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1,111 கேரட் மதிப்புள்ள... உலகின் 2வது மிகப்பெரிய வைரம் போஸ்ட்வானாவில் வெட்டியெடுப்பு

Google Oneindia Tamil News

காபோரோன்: உலகிலேயே அதிக மதிப்பு கொண்ட இரண்டாவது பெரிய வைரம் போஸ்ட்வானா நாட்டில் வெட்டியெடுக்கப் பட்டுள்ளது.

கடந்த 1905ம் ஆண்டு 3 ஆயிரத்திற்கும் அதிகமான காரட் மதிப்புள்ள வைரம் கண்டெடுக்கப்பட்டது. இதுவே உலகிலேயே அதிக மதிப்பு கொண்ட வைரமாக கருதப்படுகிறது. இந்த வைரம், 9 தனித்தனி கற்களாக பிரிக்கப்பட்டிருந்தது. அப்போது இது 22.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது.

World's second-largest diamond mined in Botswana

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா சுரங்கத்தில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. போட்ஸ்வானாவின் தலைநகர் காபோரோனிலிருந்து வடக்குப் பகுதியில் உள்ள காரோவ் சுரங்கத்திலிருந்து இந்த வைரம் கிடைத்துள்ளது. இது கனடாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லியூகரா டயமண்ட் கார்ப்பரேஷன் என்கிற நிறுவனத்திற்கு சொந்தமான வைரச் சுரங்கம் ஆகும்.

World's second-largest diamond mined in Botswana

1,111 கேரட் மதிப்புள்ள இந்த வைரத்தில் விலை மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை. 65, 56, 40 மில்லிமீட்டர் சுற்றளவு கொண்ட அந்த வைரம் உலகிலேயே இரண்டாவது மதிப்பு மிக்கதாகும் என லியூகரா டயமண்ட் நிறுவனம் கூறியுள்ளது. இதனுடன் 813 காரட், 274 காரட் எடையுள்ள வைரங்களும் கிடைத்துள்ளன.

English summary
A 1,111 carat gem-quality diamond, second in size only to the Cullinan diamond cut into the British Crown jewels, has been unearthed by Lucara Diamond Corp. in Botswana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X