For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: மோடி அரசின் கீழ் இந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களை பாதுகாப்பை உலக நாடுகள் தீவிரமாக பரிலீசிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை ஏற்க முடியாமல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புலம்பி வருகிறார். இந்தியாவின் செயலை கடுமையாக கண்டித்ததுடன், உலக நாடுகள் தலையிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் சீனாவை தவிர எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

World seriously consider safety of Indias nuclear arsenal under modi govt: imran khan

அண்மையில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இந்தியா அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தாது என கொள்கையை கடைபிடித்து வருவதாகவும், தேவைப்பட்டால் இக்கொள்கை மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் கூறினார். அத்துடன் அடுத்த தங்கள் இலக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் தான் என்றும் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் "பாசிச மற்றும் இந்து இனவாத மோடி அரசின் காட்டுப்பாட்டில் இந்தியாவில் உள்ள அணு ஆயுதக் குவியல்களை பத்திரமாக பாதுகாப்பது குறித்து உலக நாடுகள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். இது தெற்கு ஆசிய பிராந்தியத்தை மட்டுமல்ல உலகையும் பாதிக்கும் ஒரு பிரச்சனை.

ஜெர்மனியின் நாஜிப்படையைப் போல் உள்ள இந்து பாசிச இனவாத இந்திய அரசு காஷ்மீரை கைப்பற்றி உள்ளது. அங்குள்ள 90 லட்சம் முஸ்லீம்கள் இரண்டு வாரங்களாக அச்சுறுத்தலுடன் முடக்கி வைக்கப்ட்டுள்ளனர். ஐநா பார்வையாளர்களை அங்கு அனுப்ப வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்-பாஜக வை உருவாக்கியர்வர்களின் இன அழிப்பு மற்றும் இனப்படுகொலை சித்தாந்தத்திற்கும் நாஜி சித்தாந்தத்திற்கும் இடையிலான தொடர்பை புரிந்து கொள்ள கூகுள் ஒருவரால் மட்டுமே முடியும். ஏற்கனவே நான்கு மில்லியன் இந்திய முஸ்லிம்கள் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளனர். இதை உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

English summary
World must also seriously consider the safety & security of India's nuclear arsenal under modi govt: says pakistan imran khan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X