For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவசரமாக வெளியேற்றப்பட்ட 18,500 பேர்.. ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட 2ம் உலகப் போர் பாம்!

ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட பாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெர்லின்: ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட பாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போரின் போது உலக நாடுகளின் மீது வீசப்பட்ட வெடிகுண்டுகள் இப்போதும் பல வெடிக்காமல் பூமிக்கு அடியில் புதைத்து இருக்கிறது. முக்கியமாக ஜெர்மனியில் அமெரிக்கா வீசிய சில குண்டுகள் இன்னும் வெடிக்காமல் உள்ளது.

அவ்வப்போது இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்படுவது வழக்கம். இது மிகவும் ஆபத்தான குண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது

வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது

இந்த நிலையில் ஜெர்மனியில் பிராங்பார்ட் என்ற பகுதியில், பெரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கட்டிட பணி ஒன்றுக்காக குழி தோண்டிய போது, இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்கா ஜெர்மனி மீது வீசிய குண்டாகும். 70 வருடம் தாண்டியும் இந்த குண்டு இன்னும் வெடிக்காமல் உள்ளது.

எத்தனை பேர் வெளியேற்றம்

எத்தனை பேர் வெளியேற்றம்

இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் எல்லோரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார்கள். அந்த பகுதியை சுற்றி மூன்று கிலோ மீட்டருக்கு இருக்கும் மக்கள் எல்லோரையும் வெளியேற்றினார்கள். மொத்தமாக 18,500 பேர் வெளியேற்றப்பட்டார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

அவசரமாக நடந்த பணி

அவசரமாக நடந்த பணி

அதன்பின் இந்த குண்டை தரையில் இருந்து எடுக்கும் பணி தொடங்கியது. இதன் எடை 500 கிலோ கிராம் ஆகும். இந்த குண்டு விமானத்தில் இருந்து வீசப்பட்டு இருக்கிறது. எதோ கோளாறு காரணமாக இந்த குண்டு வெடிக்காமல் போய் உள்ளது. இதனால் இதை அகற்ற வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டார்.

எத்தனை மணி நேரத்தில்

எத்தனை மணி நேரத்தில்

இந்த குண்டை செயலிழக்க செய்ய 2 மணி நேரம் ஆகியுள்ளது. நான்கு திறமையான வெடிகுண்டு நிபுணர்கள் இதை செயலலிக்க செய்தனர். 2 மணி நேரத்திற்கு பின் மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் ஜெர்மனியில் இன்னும் நிறைய வெடிகுண்டுகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
World War II Bomb found in Germany, Diffused after 2 hours struggle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X