For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப் பந்தயம்.. வென்றால் எடைக்கு எடை பீர் பரிசு!

Google Oneindia Tamil News

சோனாக்ஜார்வி, பின்லாந்து: பின்லாந்தின் சோனாக்ஜார்வி என்ற நகரில் நடந்த வித்தியாசமான போட்டியில் மனைவிகளை தூக்கிக் கொண்டு லொங்கு லொங்கு என்று ஓடி வென்ற கணவர்களுக்கு அவர்களின் எடைக்கு எடை பீர் கொடுத்து பரிசளிக்கபப்ட்டது.

இது வருடா வருடம் இந்த நாட்டில் நடந்து வரும் நிகழ்ச்சியாகும். இதில் பல ஜோடிகள் ஆர்வமாக கலந்து கொள்வார்கள். இதில் பரிசு என்பது பீர்தான். எடைக்கு எடை பீர் கொடுப்பார்கள்.

இதில் பின்லாந்து மட்டுமல்லாமல் மொத்தம் 14 நாடுகளைச் சேர்ந்த ஜோடிகள் கலந்து கொண்டார்கள்.

மனைவியைத் தூக்கிக் கொண்டு...

மனைவியைத் தூக்கிக் கொண்டு...

இதில் கலந்து கொள்வோர் மனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டும். அதில் வெல்வோருக்கு பீர் பரிசாக தரப்படும். அதாவது வெற்றி பெறும் ஜோடியில், மனைவியின் எடை என்னவோ அந்த அளவுக்கு பீர் பரிசாக கிடைக்குமாம்.

உப்பு மூட்டைத் திருவிழா...

உப்பு மூட்டைத் திருவிழா...

20 வது வருடமாக இந்த ஆண்டும் இந்த உப்பு மூட்டைத் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்த முறை 60 ஜோடிகள் கலந்து கொண்டனர்.

குண்டு பெண்கள்...

குண்டு பெண்கள்...

பல பெண்கள் எடைக் குறைவாக இருந்தாலும் கூட சில பெண்கள் குண்டு குண்டாக இருந்தார்கள். இருந்தாலும் அவர்களது கணவர்மார்கள் விடாமல் தூக்கிக் கொண்டு ஓடியது கலகலப்பைக் கூட்டிது.

2 நாள் போட்டிகள்...

2 நாள் போட்டிகள்...

2 நாள் நடந்த இந்தப் போட்டி களேபரமாக காணப்பட்டது. விதம் விதமான போட்டிகளில் இந்த ஜோடிகள் கலந்து கொண்டு அசத்தினர்.

விதவிதமான பிரிவுகள்...

விதவிதமான பிரிவுகள்...

இதிலும் நான்கு விதமான பிரிவுகள் இருந்தன. முதுகில் உப்புமூட்டை மாதிரி தொற்றிக் கொள்வது, முதுகில் உட்காராமல் தொங்கிய நிலையில் இருப்பது, தோள்பட்டையில் தொங்கிக் கொள்வது, என இந்த பிரிவுகள் இருந்தன.

முதல்பரிசு....

இந்த முறை வன்டா என்ற நகரைச் சேர்ந்த விலி பர்வியானின் மற்றும் சரி விலிஜானன் ஜோடி முதல் பரிசைத் தட்டிச் சென்றது.

English summary
The Wife-Carrying World Championship has been held - with the lucky winner taking home the weight of the winning wife in beer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X