For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முன்னெச்சரிக்கைகள் அவசியம்... கொரோனா மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும்: உலக சுகாதார நிறுவனம்

Google Oneindia Tamil News

ஜெனிவா: சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காவிட்டா கொரோனா வைரஸ் மிக மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    Coronavirus May Gets Worse And Worse | WHO on Covid 19 | Oneindia Tamil

    இது தொடர்பாக டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது:

    ஐரோப்பியா, ஆசிய நாடுகள் பல கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. இன்னமும் பல நாடுகள் தவறான திசையில் சென்று கொண்டிருக்கின்றன.

    Worse And Worse And Worse- WHO warns on Coronavirus

    அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் பின்பற்றாமல் போனால் கொரோனா அதன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்போது இருக்கும் நிலைமையைவிட படுமோசமாக உச்சகட்ட மோசமான அழிவை ஏற்படுத்தும்.

    உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவது தொடர்பான முறையான நோட்டீஸ் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. இவ்வாறு டெட்ரோஸ் அதானோம் கூறினார்.

    கொரோனாவுக்கு ரெம்டிசிவியர், தோசிலிசுனாப் மருந்துகள் பாதுகாப்பானது இல்லை: ஐசிஎம்ஆர்!!கொரோனாவுக்கு ரெம்டிசிவியர், தோசிலிசுனாப் மருந்துகள் பாதுகாப்பானது இல்லை: ஐசிஎம்ஆர்!!

    கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் உலக நாடுகளுக்கு பரவியது. ஆனால் இது தொடர்பான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு எடுக்கவில்லை என்பது அமெரிக்காவின் புகார்.

    மேலும் உலக சுகாதார அமைப்பில் இருந்தே விலகுவதாகவும் அமெரிக்கா அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    WHO Director General Tedros Adhanom Ghebreyesus told If basics are not followed, the only way this Corona pandemic is going to go - it is going to get worse and worse and worse.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X