For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வுஹானில் இறால் விற்பனை செய்யும் பெண்ணுக்கு முதல் கொரானா வைரஸ் ஏற்பட்டதாக கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

வுகான்: கொரோனா வைரஸ் தொற்றால் உலகில் முதல் முதலாக பாதிக்கப்பட்ட முதல் நபர் யார் என்பது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வுகானில் இறால் விற்கும் 57 வயது பெண்ணுக்குத்தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் 28 ஆயிரம் பேரை கொன்றுள்ளது.

Recommended Video

    கொரோனா வைரஸ் தொற்றால் உலகில் முதல் முதலாக பாதிக்கப்பட்ட முதல் நபர்

    தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையால் அடையாளம் காணப்பட்ட வெய் கிக்ஸியன் என்ற 57 வயது பெண், கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ஹுவானன் கடல் உணவு சந்தையில் இறால்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். தனக்கு பொதுவான காய்ச்சல் இருப்பதாக நம்பி, வெய் கிக்ஸியன் ஒரு உள்ளூர் கிளினிக்கிற்கு சிகிச்சைக்காகச் சென்றார், அங்கு அவருக்கு ஊசி போடப்பட்டிருக்கிறது.

    இருப்பினும், வெய் தொடர்ந்து பலவீனமாக உணர்ந்தார் மற்றும் ஒரு நாள் கழித்து வுஹானில் அடுத்தடுத்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு சரியாகவில்லை. தொடர்ந்து காய்ச்சல் இருந்திருக்கிறது . இதனால் வெய் டிசம்பர் 16 அன்று மிகப்பெரிய மருத்துவ வசதிகள் உள்ள வுஹான் யூனியன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

    கொரோனா பாதிப்பு: இந்தியா 3-வது ஸ்டேஜில் இருக்கிறது என்பது தவறான செய்தி கொரோனா பாதிப்பு: இந்தியா 3-வது ஸ்டேஜில் இருக்கிறது என்பது தவறான செய்தி

    கடல் உணவு சந்தை

    கடல் உணவு சந்தை

    இதற்கிடையே வெய்யைப் போலவே அறிகுறிகளுடன் ஹுவானன் மார்க்கெட்டைச் சேர்ந்த பலரும் வுகான் யூனியன் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில் டிசம்பர் மாத இறுதியில், கடல் உணவு சந்தையுடன் கொரோனா வைரஸ் தோன்றுவதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். வெய் தனிமைப்படுத்தப்பட்டார். இதனை சீன பத்திரிக்கையில் வெளியான தகவலை வைத்து தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உறுதிப்படுத்தி உள்ளது.

    கழிவறையே காரணம்

    கழிவறையே காரணம்

    கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து வுகானில் உள்ள கடல்மீன்கள் விற்கும் "நேரடி சந்தை" காலவரையின்றி மூடப்பட்டது. இதற்கிடையில் முதல்முதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெய்க்கு கடந்த ஜனவரி மாதம் உடல் நிலை சரியாகி பூரண குணமடைந்தார். அவர் தான் வேலை செய்த கடல் மீன்கள் இறைச்சி கூடத்தில் உள்ள கழிவறையை பயன்படுத்திய பிறகே நோய் தனக்கு வந்ததாக நம்புகிறார். அவருடன் இறால் மற்றும் மீன் விற்கும் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தார்

    விரைவாக செயல்படவில்லை

    விரைவாக செயல்படவில்லை

    வுகான் நகராட்சி ஆணையம் கண்டுபிடித்த முதல் 27 நோயாளிகளில் 24 பேர் வுகான் மீன் மற்றும் இறால் விற்கும் சந்தையுடன் தொடர்பு உடையவர்கள் என்பதை உறுதி செய்துள்ளது. ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்த முதல் நபர் வெய் அல்ல என்றும் கூறியுள்ளது.இதனிடையே சீன அரசாங்கம் "விரைவில் செயல்பட்டிருந்தால்" வைரஸால் இறப்போரின் எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கலாம் என்று வெய் கூறினார்.

    எல்லைகள் கடந்தவை

    எல்லைகள் கடந்தவை

    இந்நிலையில் லான்செட் மருத்துவ இதழில் ஒரு ஆய்வு டிசம்பர் 1 அன்று கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டதாகக் கூறுகிறது. கொரோனா வைரஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 27,989 ஆக இருந்தது. 183 நாடுகளில் 605,220 பேருக்கு பரவி உள்ளது. இத்தாலியில் 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 6000 பேர் ஸ்பெயினில் இறந்துள்ளனர். சீனாவில் 3,295 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் தான் உலகிலயே மிக அதிகபட்சமாக 104,837 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    லான்செட் இதழ் தகவல்

    லான்செட் இதழ் தகவல்

    இந்நிலையில் லான்செட் மருத்துவ இதழில் ஒரு ஆய்வு டிசம்பர் 1 அன்று கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டதாகக் கூறுகிற கொரோனா வைரஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 27,989 ஆக இருந்தது. 183 நாடுகளில் 605,220 பேருக்கு பரவி உள்ளது. இத்தாலியில் 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 6000 பேர் ஸ்பெயினில் இறந்துள்ளனர். சீனாவில் 3,295 பேர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் தான் உலகிலயே மிக அதிகபட்சமாக 104,837 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    57-year-old female shrimp seller in China's Wuhan city, Identified as one of the first victims of COVID-19
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X