For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிருகங்களுக்கு கொரோனா வைரஸ்.. அடுத்து என்ன நடக்கும்? வுஹான் விஞ்ஞானி சொன்ன அதிர்ச்சித் தகவல்!

Google Oneindia Tamil News

பீஜிங் : கொரோனா வைரஸ் முதன் முதலில் பரவத் துவங்கிய சீனாவின் வுஹான் பகுதியில் இருக்கும் வைராலஜிஸ்ட் விஞ்ஞானி ஒருவர் மிருகங்கள் மூலமாக மனிதனுக்கு கொரோனா பரவும் ஆபத்து இருப்பதாக கூறி இருக்கிறார்.

Recommended Video

    விலங்குகளுக்கு கொரோனா பரவினால் என்ன ஆகும்? விஞ்ஞானி சொன்ன அதிர்ச்சி தகவல்

    மிருகங்களுக்கு கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்படாவிட்டாலும் கூட அவை கொரோனா வைரஸை மனிதனுக்கு பரப்பும் ஒரு கருவியாக செயல்பட வாய்ப்பு உள்ளதாக அவர் கூறி உள்ளார்.

    மேலும், கொரோன வைரஸ் பாதித்தவர்களின் வீடுகளில் இருக்கும் செல்லப் பிராணிகளையும் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் எனக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார் அவர்.

    வேகமாக பரவும் கொரோனா.. தமிழகத்தின் இன்றைய நிலவரம் என்ன... சுகாதாரத்துறை அறிக்கை வேகமாக பரவும் கொரோனா.. தமிழகத்தின் இன்றைய நிலவரம் என்ன... சுகாதாரத்துறை அறிக்கை

    நியூயார்க் புலிக்கு கொரோனா

    நியூயார்க் புலிக்கு கொரோனா

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி வரும் நிலையில் அங்கே மிருகக் காட்சி சாலையில் உள்ள புலி ஒன்றிற்கும், மூன்று ஆப்ரிக்க சிங்கங்களுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், மிருகங்களுக்கும் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    எப்படி பரவியது?

    எப்படி பரவியது?

    மேலே கூறப்பட்ட மிருகங்களுக்கு, அதன் பராமரிப்பாளர் மூலமே கொரோனா வைரஸ் தொற்று பரவியது உறுதி ஆகி உள்ளது. மேலும், அந்த மிருகங்கள் விரைவில் குணமடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் மிருகங்கள் மீதான கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.

    மனிதனுக்கு பாதிப்பு

    மனிதனுக்கு பாதிப்பு

    அந்த மிருகங்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால், அந்த மிருகங்கள் வைரஸை தங்கள் உடலில் வைத்துக் கொண்டு, அதை மனிதனுக்கு பரப்ப வாய்ப்பு உள்ளது. ஆனால், அது எந்த அளவுக்கு பரவும் என்பது பற்றி அறிய ஆய்வு தேவை.

    வுஹான் விஞ்ஞானி தகவல்

    வுஹான் விஞ்ஞானி தகவல்

    இது பற்றி வுஹான் விஞ்ஞானி யாங் ஸாங்கியு கூறுகையில், மனிதனில் இருந்து மிருகங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்பதால் மட்டுமே, மிருகங்கள் தங்களுக்கு இடையே அந்த வைரஸை பரப்பிக் கொள்ளும் என கருத முடியாது என கூறி உள்ளார். ஆனால், அந்த மிருகங்கள் மூலம் மனிதனுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் எனவும் கூறுகிறார்.

    மீண்டும் மனிதனுக்கே பாதிப்பு

    மீண்டும் மனிதனுக்கே பாதிப்பு

    மிருகங்களுக்கு மனிதன் மூலமாக மட்டுமே இதுவரை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த மிருகங்கள் மூலம் நேரடியாக கொரோனா வைரஸ் பரவாவிட்டாலும், எப்படி ஒரு பொருளில் வைரஸ் இருந்து அதை மனிதன் தொட்டால் அவனுக்கு தொற்றிக் கொள்ளுமோ, அதே வகையில் மிருகங்களின் உடலில் இருக்கும் வைரஸ் கிருமிகள் மூலம், மனிதனுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்கிறார் யாங்.

    மிருகங்களுக்கு பரவுமா?

    மிருகங்களுக்கு பரவுமா?

    இரண்டு நாய்கள் ஒன்றாக விளையாடுவதன் மூலம் கொரோனா வைரஸ் அவைகள் இடையே பரவாது. ஆனால், அந்த நாயின் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால், அந்த நாய்க்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    தனிமைப்படுத்த வேண்டும்

    தனிமைப்படுத்த வேண்டும்

    இந்த சிக்கலுக்கு முதற்கட்ட தீர்வாக வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகளையும் வீட்டின் உறுப்பினராக கருத வேண்டும். வீட்டில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால், அந்த வீட்டில் இருக்கும் மிருகங்களையும் கண்காணிப்பு வளையத்தில் வைக்க வேண்டும். மனிதர்களைப் போல அவற்றையும் தனிமைப்படுத்த வேண்டும் என்கிறார் யாங்.

    வைரஸ் உருவான இடம்

    வைரஸ் உருவான இடம்

    சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருக்கும் பல்வேறு மிருகங்களின் இறைச்சி விற்கும் சந்தையில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்பட்டாலும், வுஹானில் இருக்கும் வைரஸ் ஆய்வு மையத்தில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியது என சிலர் கூறி வருகின்றனர்.

    வுஹான் விஞ்ஞானி சொன்னால்..

    வுஹான் விஞ்ஞானி சொன்னால்..

    இந்த நிலையில், வுஹான் விஞ்ஞானி ஒருவர் மிருகங்களுக்கு ஏற்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி பேசி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மிருகங்களையும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வருவது மிகவும் கடினமான காரியம் என்றாலும், அதை நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

    English summary
    Wuhan virologist warns pet animals should also be quarantined, if any family member gets infected.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X