For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிகிச்சைக்காக சென்ற பெண்ணின் கால் மூட்டில் நூற்றுக்கணக்கான தங்க ஊசிகள் கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

சியோல்: மூட்டு வலியால் அவதிப்பட்ட தென் கொரியப் பெண் ஒருவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கால் மூட்டுக்குள் நூற்றுக்கணக்கான தங்க ஊசிகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தென் கொரியாவை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சமீபகாலமாக கடும் மூட்டு வலியால் அவதிப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மூட்டுவலிக்கு சிகிச்சைப் பெற மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது அவரது காலை மருத்துவர்கள் எக்ஸ்-ரே செய்து பார்த்துள்ளனர். அதில், கால் மூட்டுக்குள் ஏராளமான தங்க ஊசிகள் இருப்பது தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இது குறித்து மருத்துவர்கள் நடத்திய விசாரணையில், ‘இதற்குமுன் அப்பெண் கடும் கால்வலியின் காரணமாக அக்குபஞ்சர் முறையில் மருத்துவ பரிசோதனைகள் எடுத்துக் கொண்டதாகவும், தொடர்ந்து வலி குணமடைய வேண்டுமென்பதற்காக அந்த நுண்ணிய ஊசிகள் கால் முட்டிக்குள் விடப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

ஆனால், தற்போது அப்பெண்ணிற்கு இந்த ஊசிகளால் ஒவ்வாமை ஏற்பட்டதால் கடுமையான வலி ஏற்பட்டுள்ளதை கண்டறிந்த மருத்துவர்கள், அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

English summary
When doctors examined an X-ray image of the knees of a woman experiencing severe joint pain, they found a gold mine: hundreds of tiny gold acupuncture needles left in her tissue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X