For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடிக்கடி இருமல்.. சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு என்னாச்சு.. கொரோனாவா? பகீர் கிளப்பிய ஊடகங்கள்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனா அதிபர் ஜி ஜின்பிங், ஷென்ஷனில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் உரையாற்றும் போது அடிக்கடி இருமினார். இதனால் அவர் பேசிக்கொண்டிருந்த போது அரசு ஊடகங்கள் கேமராவை வேறு பக்கம் திருப்ப வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன. இதனால் ஜின்பிங்கிற்கு கொரோனா வந்துள்ளதா என்ற சந்தேகத்தை சீன ஊடகங்கள் கிளப்பி உள்ளன.

சீனா அதிபர் ஜி ஜின்பிங், ஷென்ஷனில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசிக்கொண்டிருந்த போது அடிக்கடி இருமல் வந்தது. தண்ணீரும் அடிக்கடி குடித்தார்..

இதனால் அவரது பேச்சை ஒளிபரப்பிக் கொண்டிருந்த அரசு ஊடகங்கள் கேமராவை வேறு பக்கம் திருப்பின. அத்துடன் அவர் தண்ணீர் குடிப்பதையும் அடிக்கடி காட்டிக்கொண்டிருந்தன.

இருமல் சளி

இருமல் சளி

இதையடுத்து சீன ஊடகங்கள் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு கொரோனா வந்துவிட்டதா என்று ஊகங்களை கிளப்பி உள்ளன. ஹாங்காங்கின் ஆப்பிள் டெய்லி, "ஷென்ஜென் நிகழ்ச்சியில் ஜி ஜின்பிங்கிற்கு இருமல் மற்றும் சளி" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது. அத்துடன் சீன அதிபர் அடிக்கடி "இருமியதுடன் குடிநீர் பருகியதையும் குறிப்பிட்டிருந்தது.

டிரம்புக்கு வந்த கொரோனா

டிரம்புக்கு வந்த கொரோனா

இதனால் ஜி ஜின்பிங்கிற்கு கொரோனா உள்ளதா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இதுபற்றி அவர் சோதித்து பார்த்தாரா இல்லையா என்பது தெரியவில்லை. உலகம் இதுவரை சீனாவின் வூகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸில் இருந்து இதுவரை விடுபடவில்லை. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
பிரேசிலின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ உள்ளிட்டோருக்கு கொரோனா ஏற்பட்டது,. சிகிச்சைக்கு பின்னர் மீண்டனர்.

மறைத்துவிட்ட ஜின்பிங்

மறைத்துவிட்ட ஜின்பிங்

இதேபோல் பொலிவியா, குவாத்தமாலா மற்றும் ஹோண்டுராஸ் அதிபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆர்மீனியா மற்றும் ரஷ்யாவின் பிரதமர்களைப் போலவே. ஜி ஜின்பிங்கும் கொரோ ஏற்பட்டிருந்தால் இந்த பட்டியலில் இணைந்திருப்பார். எனினும் அவருக்கு கொரோனா வந்ததா இல்லையா? அல்லது இப்போது என்ன நிலை என்பது உள்ளிட்ட எந்த தகவலும் வெளிப்படையாக சீனா அறிவித்தது இல்லை. இரண்டு முறை ஜின்பிங் மர்மமாக மறைந்துவிட்டார். அதன்பிறகே பொதுவெளியில் வந்தார்.

உலகத்தை நம்ப வைக்க

உலகத்தை நம்ப வைக்க

இரண்டு முறை பொது பார்வையில் இருந்து காணாமல் போன பின்னர் மீண்டு வந்த ஜி ஜின்பிங். முககவசம் அணியாமல் பொதுமக்கள் முன்பு தோன்றினார். சீனா கொரோனா வைரஸை தோற்கடித்தது என்பதை நிரூபிக்கும் முயற்சியாக அவர் லாக்டவுனை தளர்த்தினார். உலகமே கொரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கி தவிக்கும் நிலையில் சீனா மட்டும் கொரோனாவை வென்றுவிட்டதாக உலகத்தை நம்ப வைக்க எல்லாவற்றையும் மறைத்து வருகிதுறது.

சீன மக்கள்

சீன மக்கள்

இந்த சூழலில் சீனா தனது குடிமக்களுக்கு சோதனை தடுப்பூசிகளை செலுத்துவதோடு, வைரஸ் மறைந்துவிட்டதைப் போல கட்டுப்பாடுகளை நீக்கி வருகிறது. சீனாவில் உள்ளவர்களோ கொரோனா இங்கு இல்லை.. போய்விட்டது என்றே நம்புகிறார்கள். ஆனால் ஜி ஜின்பிங் இருமிய வீடியோக்கள் கொரோனா குறித்த சர்ச்சையை அதிகமாக்கி உள்ளது.

English summary
China’s President Xi Jinping violently coughs throughout a speech to Communist party faithful in Shenzhen, prompting speculation on his health, as state media cuts away each time he is forced to stop speaking.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X