For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக 2-வது முறையாக ஸீ ஜின்பிங் தேர்வு!

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் பிரதமர் ஸீ ஜின்பிங்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

பீஜிங் : சீனாவில் நேற்று நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் 2-வது முறையாகத் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் பிரதமர் ஸீ ஜின்பிங்.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் பலத்துடன் ஆட்சி செலுத்தி வருகிறது. கட்சியின் முக்கிய உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய பொலிட் பீரோ உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.

Xi Jinping elected as general secretary of communist party of china

சீனா மக்கள் அதிகம் எதிர்பார்த்த இந்தத் தேர்தலில், அதிக வாக்குகள் பெற்று சீன பிரதமர் ஸீ ஜின்பிங் பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் இவர் இரண்டாவது முறையாக இந்தப் பதவியை அடைகிறார்.

முதல் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட போது, சீனாவை உலகின் வல்லரசு நாடு ஆக்குவேன் என்று உறுதியளித்து இருந்தார். அதுபோல, சீனாவை வல்லரசுப் பாதையில் அழைத்துச்சென்று இருக்கிறார். தற்போது, மீண்டும் தலைவர் ஆகி இருப்பதன் மூலம் சீனாவின் மிகுந்த பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் ஆகி இருக்கிறார் ஸீ ஜின்பிங்.

இவரது பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள். இதன் மூலம் அடுத்த தலைமுறைக்குமான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகி இருக்கும் பிரதமருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு முன் வெகு சிலருக்கே இரண்டாம் முறை பொதுச்செயலராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Xi JInping appointed as the General secretary of communist party of China. he is elected for the second time for this post. This makes him the most powerful leader of the decade.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X