For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு உதவி.. அமெரிக்கவாழ் இந்தியருக்கு 27 வருட சிறை!

அமெரிக்காவில் வாழும் இந்தியருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Google Oneindia Tamil News

ஓஹியோ: அமெரிக்காவில் வாழும் இந்தியருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறை தண்டனை நிறைவடைந்த பின் அவரை நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

39 வயதான யாக்யா ஃபரூக் முகமது திருமணமானவர். இவர் 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை ஓஹியோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துள்ளார்.

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த அன்வர் அல் அவலாக்கி என்பவருக்கு உதவி செய்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அமெரிக்க அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

பரபரப்பு தீர்ப்பு

பரபரப்பு தீர்ப்பு

இதுதொடர்பான விசாரணை டோலிடோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்

இதுதொடர்பான நீதிமன்றத்தின் அறிக்கையில் அமெரிக்க ஜனநாயகத்தை அச்சுறுத்தும் வகையில் முகமது நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் மற்றும் டோலிடோ நீதிபதியையும் அவர் தாக்க முயற்சித்ததாக கூறப்பட்டுள்ளது.

Recommended Video

    Try in Google Search! South Indian Masala vs North Indian Masala-Oneindia Tamil
    அல்கொய்தாவுக்கு உதவி

    அல்கொய்தாவுக்கு உதவி

    நீண்டகால சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டிய ஒரு குற்றவாளி என்றும் நீதிமன்றத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு ஏமன் சென்ற முகமது சதித்திட்டத்துக்காக அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கு 22000 அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளது உறுதியாகியுள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    27 ஆண்டுகள் சிறை

    27 ஆண்டுகள் சிறை

    இந்த குற்றங்களுக்காக முகமதுவுக்கு 27ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை முடிந்த பின் அவர் நாடு கடத்தப்படவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    English summary
    Yahya Farooq Mohammad, 39 married to an American now faces 27 years in prison apart from deportation if convicted.The prosecution alleged that Mohammad had provided material support to Anwar Al-Awalaki of the al-Qaeda.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X