For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Year Ender 2020: பெய்ரூட் வெடிப்பு! போரில் கூட ஏற்படாத சேதம்..30 நொடியில் வீட்டை இழந்த 3 லட்சம் பேர்

Google Oneindia Tamil News

பெய்ரூட்; ஆகஸ்ட் 4 மதிய வேளையில் பெய்ரூட் மத்திய துறைமுகத்தின் எரிபொருள் தொழிற்சாலையில் சிறிய அளவில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் மொத்த துறைமுகமும் வெடித்துச் சிதைந்தது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட 2,750 டன் எடை கொண்ட அம்மோனியம் நைட்ரேட் ரசாயனம் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

Year Ender 2020: lebanons Beirut huge explosion: Hundreds of people died

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்டிருந்த இந்த ரசாயனம் இருந்த இடத்திலிருந்து தீப்பிழம்புகளும் கரும்புகைகளும் வெளியாகின. இதை பார்த்த பலர் ஏதோ தீவிபத்து என எண்ணி அதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

ரஜினி பக்கம் போகிறாரா ஓபிஎஸ்.. என்னாது.. சான்ஸே இல்லை.. மறுக்கும் ஆதரவாளர்கள்!ரஜினி பக்கம் போகிறாரா ஓபிஎஸ்.. என்னாது.. சான்ஸே இல்லை.. மறுக்கும் ஆதரவாளர்கள்!

அப்போது திடீரென பயங்கர சப்தத்துடன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியது. இதனால் அருகில் இருந்த கட்டடங்கள் அனைத்தும் சரிந்து விழுந்தன. சுமார் 2 கி.மீ. சுற்றளவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. 2.50 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். கடல் ஆர்ப்பரித்து வீடுகளை அடித்து கொண்டு செல்வது போல் வெடிவிபத்தால் அங்கிருந்த கட்டடங்கள் சீட்டுக் கட்டு போல் வேகமாக சரிந்தன ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டம் ஆகின.

எங்கு திரும்பினாலும் உடல்கள்.. உடைந்த உடல் பாகங்கள்.. ரத்த வாடை.. உடைந்து கிடக்கும் வாகனங்கள், கண்ணாடிகள், உருத்தெரியாமல் கிடக்கும் கட்டிடங்கள். 10 வருடமாக கொஞ்சம், கொஞ்சமாக கட்டி எழுப்பப்பட்ட பெய்ரூட் நகரம் மொத்தமாக உடைந்து நொறுங்கியது வெறும் 30 வினாடிகளில். இதை அந்த மக்களால் ஆயுளுக்கும் மறக்க இயலாது

லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிக்குழு தொடங்கி இஸ்ரேல் அரசு வரை இந்நிகழ்விற்குக் காரணமாகச் சந்தேகிக்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அரசின் அலட்சியம் முக்கிய காரணம் என்பதால் மொத்த அரசும் ராஜினாமா செய்தது. இந்த பெய்ரூட் பெருவெடிப்பு! சம்பவம் 2020ம் ஆண்டில் மொத்த உலகத்தாலும் மறக்க முடியாதது.

English summary
Hundreds of people had been died in a powerful explosion that ripped through Lebanon's capital, Beirut, according to the country's health minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X