For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக அளவில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த நாட்டில் மிகப்பெரிய பஞ்சம் வரப்போகிறது: எச்சரிக்கும் ஐநா சபை

By BBC News தமிழ்
|

image-_98676063_gettyimages-655463402.jpg tamil.oneindia.com}

ஏமனில் உதவி நடவடிக்கைகளை தொடங்காவிட்டால் உலகில் கடந்த சில தசாப்தங்கள் காணாத மிகப்பெரிய பஞ்சத்தை அந்நாடு எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநாவின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மனிதாபிமான கொள்கைகளுக்கான ஐநாவின் மூத்த அதிகாரி மார்க் லோகாக், போரினால் சின்னாபின்னமான ஏமன் நாட்டில் படைகளின் முற்றுகை நிலையை தளர்த்துமாறு செளதி தலைமையிலான கூட்டணியை வலியுறுத்தியுள்ளார்.

செளதி தலைநகரான ரியாத்தை நோக்கி ஹூதி போராளிகள் ஏவுகணை ஒன்றை ஏவியிருந்த நிலையில், கடந்த திங்களன்று, ஏமன் நாட்டிற்கு செல்லும் வான், தரை மற்றும் கடல் பாதைகளை கூட்டணி படைகள் அடைத்தன.

'ஏமனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பஞ்சம் ஏற்படலாம்'
Reuters
'ஏமனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பஞ்சம் ஏற்படலாம்'

ஹூதி போராளிகள் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணையை ரியாத் அருகே வானில் இடைமறித்து அழிக்கப்பட்டது.

போராளிகளுக்கு இரான் ஆயுதம் அனுப்பி வருவதை நிறுத்தும் நோக்கில் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளதாக செளதி அரேபியா தெரிவித்துள்ளது.

ஆனால், போராளிகளுக்கு ஆயுதங்கள் எதையும் வழங்கவில்லை என்று செளதியின் குற்றச்சாட்டுகளை இரான் மறுத்துள்ளது.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
Yemen faces the world's largest famine in decades "with millions of victims" if aid deliveries are not resumed, a senior UN official has warned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X