For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேபிள் கனெக்ஷன் இனி வேண்டாம்.. டிவி சேனல்களை ஒளிபரப்ப ஆயத்தமாகிறது யூடியூப்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: யூடியூப் வீடியோ இணையதளத்தில் இணையதள டிவி சேவையை அறிமுகம் செய்ய யூடியூப் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் கேபிள் டிவியை இணைய வசதி கொண்ட டிவியில் பார்க்க வசதி ஏற்பட வாய்ப்புள்ளது.

கேபிள் டிவி சேனல்களை தனது தளத்தில் ஒளிபரப்ப யூடியூப் திட்டமிட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

YouTube going to replace your TV by 2017

யூ டியூப் தளத்தில் சந்தா செலுத்தி கேபிள் டிவி சேவையைப் பெறும் வகையில் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் இத்திட்டம் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இத்திட்டத்திற்காக யூடியூப் நிறுவனம் பல முன்னணி மீடியா நிறுவனங்களான வயாகாம், என்பிசி யுனிவர்சல், டுவெண்டி பர்ஸ்ட் சென்சுரி ஃபாக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன்மூலம், குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேனல்களை யூடியூப் காண்பிக்க வசதி ஏற்பட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே டிடிஹெச், கேபிள் கனெக்ஷன் இன்றியே டிவி சேனல்களை ரசிக்க இனி வாய்ப்பு ஏற்படும். இந்த இணையதள டிவி சேவை குறித்து தகவல் அளிக்க யூடியூப் நிறுவனம் மறுத்துவிட்டது.

English summary
YouTube is working on a paid subscription service called Unplugged that would offer customers a bundle of cable TV channels streamed over the internet, people familiar with the plan said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X