For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”நினைத்ததை விட பயங்கரமானது ஜிக்கா வைரஸ்” - அதிர்ச்சி அளிக்கும் அமெரிக்க டாக்டர்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஜிக்கா வைரஸ் நினைத்ததை விட அபாயகரமானது என்று அமெரிக்க மருத்துவரான அன்னே சுஷாட் தெரிவித்துள்ளார்.

ஜிக்கா வைரசின் தன்மை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் டாக்டர் அன்னே சுஷாட் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "பிறக்கும் குழந்தைகள் குறைபாடுடன் பிறப்பதற்கு ஜிக்கா வைரசுக்கு தொடர்பு உள்ளது. முன்பு கணிக்கப்பட்டதைவிட ஜிக்கா வைரஸ் பரப்பும் கொசுக்கள் அமெரிக்காவில் அதிக மாகாணங்களில் பரவியிருக்கலாம்.

பயங்கரமான வைரஸ்:

பயங்கரமான வைரஸ்:

அமெரிக்காவில் குறைபாடுடன் குழந்தைகள் பிறந்து உள்ளதற்கு ஜிக்கா வைரஸ் தொடர்பு உள்ளது. இதுவரையில் வைரஸ் தொடர்பாக நமக்கு தெரியவந்துள்ள தகவலின்படி நினைத்ததை விட பயங்கரமானது என்பதை காட்டுகிறது" என்றார்.

நிதி ஒதுக்க கோரிக்கை:

நிதி ஒதுக்க கோரிக்கை:

இவ்வருட தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா வைரசை எதிர்க்கொள்ள உடனடி நிதியாக 1.8 பில்லியல் டாலர் நிதியை ஒதுக்க அமெரிக்க காங்கிரசிடம் கேட்டுக் கொண்டார். "ஜிக்கா" வைரஸ் தடுப்பு விவகாரத்தில் போதுமான பணிகள் செய்யப்பட்டு உள்ளது.

அதிகமான பணத்தேவை:

அதிகமான பணத்தேவை:

கொசுக்களுக்கான எதிரான இந்த போராட்டத்தில் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கும் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கும் அமெரிக்காவிற்கு அதிகமான பணத்தேவை உள்ளது. பீதி அடையவேண்டிய தேவையில்லை.

பெரியவர்களுக்கும் பிரச்சினை:

பெரியவர்களுக்கும் பிரச்சினை:

எப்படி தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளையை ஜிக்கா வைரஸ் அழிக்கிறது என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஜிக்கா வைரஸ் பெரியவர்களுக்கும் அரிதான நரம்பியல் பிரச்சனையும் ஏற்படுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.

English summary
"Most of what we've learned is not reassuring," said Dr Schuchat at a White House briefing on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X