For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைரத்தொழிலை தேசிய மயமாக்குகிறது ஜிம்பாப்வே.. சீனாவுக்கு பேரிடி!!

Google Oneindia Tamil News

ஹராரே: வைரத் தொழில் தேசிய மயமாக்கப்படும் என ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே உலகின் மிகப்பெரிய வைர உற்பத்தியாளர்களில் ஒன்றாகவும், எட்டாவது மிகப்பெரிய வைர ஏற்றுமதியாளராகவும் உள்ளது. ஜிம்பாப்வே நாட்டின் மிகப்பெரிய மராங்கே வைர சுரங்கம் உலக வைரங்களில் 10 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது.

சுரங்க வைரங்கள் மற்றும் பிளாட்டினம் மற்றும் குரோம் போன்ற பிற கனிமங்களே ஏழையான ஆப்பிரிக்க நாட்டின் வருவாயின் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது.

8 இடங்கள்... 9 மனிதவெடிகுண்டுகள்... புகைப்படங்களுடன் பட்டியலை வெளியிட்டது இலங்கை!8 இடங்கள்... 9 மனிதவெடிகுண்டுகள்... புகைப்படங்களுடன் பட்டியலை வெளியிட்டது இலங்கை!

தேசியமயம்

தேசியமயம்

இந்நிலையில் வைரத் தொழில் தேசிய மயமாக்கப்படும் என ஜிம்பாப்வே நாட்டின் அதிபரான 92 வயது ராபர்ட் முகாபே அறிவித்துள்ளார். மேலும் ஜிம்பாப்வேயில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு சுரங்க நிறுவனங்கள் மீதும் அவர் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.

திருடிவிட்டன

திருடிவிட்டன

வெளிநாட்டு சுரங்க நிறுவனங்கள் வைரத் தொழில் வருவாயில் பில்லியன் கணக்கான டாலர்களை திருடிவிட்டதாக முகாபே குற்றம் சாட்டியுள்ளார். வெளிநாட்டு சுரங்க நிறுவனங்களை நம்ப முடியாது என்பதால் அரசு சார்ந்த துறையின் நாட்டின் வைர சுரங்கங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதால் லாபம் ஈட்ட முடியும் என்றும் அதிபர் முகாபே தெரிவித்துள்ளார்.

அரசு அதிரடி உத்தரவு

அரசு அதிரடி உத்தரவு

கடந்த சில ஆண்டுகளில் ஜிம்பாப்வே தொழில்துறையின் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான லாபத்தில் 2 பில்லியன் டாலர்கள் மட்டுமே பெற்றது. இந்நிலையில் ​​வெளிநாட்டு சுரங்க நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைத் நிறுத்த வேண்டும் என்றும் உடனடியாக சுரங்கங்களை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ஜிம்பாப்வே அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் சென்ற நிறுவனங்கள்

நீதிமன்றம் சென்ற நிறுவனங்கள்

ஜிம்பாப்வேயில் செயல்படும் வெளிநாட்டு சுரங்க நிறுவனங்கள் அதிபர் முகாபேயின் முடிவை எதிர்த்து போராட முடிவு செய்துள்ளன. அதிபரின் உத்தரவை எதிர்த்து வெளிநாட்டு சுரங்க நிறுவனங்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளன.

சீனாவுக்கு பேரிடி

சீனாவுக்கு பேரிடி

ஜிம்பாப்வே அரசின் தேசியமயமாக்கல் முடிவால் வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. குறிப்பாக அதிபர் முகாபேயின் இந்த முடிவு சீனாவுக்கு பெரும் இடியாக உள்ளது. ஏனெனில் சுரங்கத் தொழிலில் சீன நிறுவனங்கள் பல பில்லியன்களை முதலீடு செய்துள்ளன.

உள்ளூர் நிறுவனங்கள்

உள்ளூர் நிறுவனங்கள்

வெளிநாட்டு சுரங்க நிறுவனங்கள் ஜிம்பாப்வேயில் தனியாக செயல்பட முடியாது, ஆனால் உள்ளூர் நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட முடியும். ஜிம்பாப்வே வெளிநாட்டு உதவியின்றி அதன் வைரங்களை தயாரிக்க முடியுமா என்பது குறித்து அந்நாட்டு சுரங்கத் துறை வல்லுனர்கள் தெளிவுபடுத்தவில்லை.

நிறுவனங்கள் தயக்கம்

நிறுவனங்கள் தயக்கம்

சுரங்கத் தொழிலை திறம்பட செய்ய ஜிம்பாப்வே நாட்டிடம் மூலதனம் மற்றும் தொழில்நுட்பம் இல்லை. மறுபுறத்தில் நாட்டின் பொருளாதாரம் பல ஆண்டுகளாக திணறி வருகிறது. ஜிம்பாப்வேவின் நிலையற்ற அரசியல் நிலைமை காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயங்கி வருகின்றன. அதிபர் ராபர்ட் முகாபே 35 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்திருக்கிறார், மேலும் அவர் இன்னும் அதிகாரத்தில் உள்ளார் என்பதில் சந்தேகமில்லை.

English summary
Zimbabwe's 92-year old president Robert Mugabe, has announced that the African country will nationalize its diamond mining industry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X