காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

45 லிட்டர் கொள்ளளவு காருக்கு 47 லிட்டர் பெட்ரோல் எப்படி நிரப்ப முடியும்.. பெட்ரோல் பங்கில் ஷாக்!

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சங்குபாணி பெட்ரோல் பங்கில் காருக்கு 5 ஆயிரம்(47 லிட்டர் பெட்ரோல்) ரூபாய் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொட்டுகாமல் மோதலில் ஈடுபட்டதாக காஞ்சிபுரம் சாலபோகம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சால்டின்(42) என்பவர் மீது பெட்ரோல் பங்க் உரிமையாளர் சாய் என்பவர் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Recommended Video

    45L கொள்ளவு கொண்ட காருக்கு 47L பெட்ரோல்? பெட்ரோல் பங்கில் வாக்குவாதம் - வீடியோ

    காஞ்சிபுரம் நெல்லுகார பகுதியில் அமைந்துள்ளது சங்குபாணி பெட்ரோல் பங்க். இந்த பெட்ரோல் பங்கிற்கு நாம் தமிழர் கட்சி பிரமுகர் சால்டின்(42) என்பவர் நேற்று கர்நாடகா பதிவெண் கொண்ட போர்டு ஐகான்(ford icon) காரில் வந்துள்ளார். பெட்ரோல்போடும் படி அங்கு உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.

    இந்நிலையத்தில் ஊழியர் பெட்ரோல் பிடித்த போது 45லிட்டர் கொள்ளவு கொண்ட அக்காரினில் 48லிட்டரையும் தாண்டி பெட்ரோல் மீட்டரில் காட்டியதை கண்டு சால்டின் அதிர்ச்சியடைந்தார்.

    பெட்ரோல் முறைகேடு

    பெட்ரோல் முறைகேடு

    சால்டின், பெட்ரோல் பங்க் ஊழியரிடம் தான் காரை ஓட்டியே வந்ததாகவும் ஏற்கனவே இதில் 2லிட்டர் போல் பெட்ரோல் இருந்ததாகவும் ஆனால் தாங்கள் 48லிட்டரையும் தாண்டியும் போட்டு ஏன் நிரம்பவில்லை? 47 லிட்டர் பெட்ரோல் என் கார் பிடித்திருக்கும். வாய்ப்பே இல்லை. முறைகேடு நடந்துள்ளது. காரின் கொள்ளவை விட பெட்ரோல் போட முடியாது எனறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    விசாரணை

    விசாரணை

    மேலும் பெட்ரோல் போடுவதில் முறைகேடு இருப்பதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சால்டின் என்பவரையும் காவல் நிலையத்தில் கொண்டு சென்று இருதரப்பினரும் புகார் பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டனர்

    மறுப்பது ஏன்

    மறுப்பது ஏன்

    நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சால்டின், அக்கட்சியின் காஞ்சிபுரம் வேட்பாளர் ஆவார். கர்நாடகா பதிவு எண் கொண்ட கார் வைத்திருப்பதால் அவர் தமிழ்நாட்டில் வாகனத்தை பயன்படுத்துவதற்கான உரிமம் வைத்துள்ளாரா என்று விசாரித்து வருகிறார்கள். மேலும் பெட்ரோல் பங்கில் நடந்தது முறைகேடா அல்லது பணம் தர மறுப்பதற்கு என்ன காரணம் என்பதையும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    பொதுமக்கள் அவதி

    பொதுமக்கள் அவதி

    பெட்ரோல் பங்கில் முறைகேடு புகார் காரணமாக பெட்ரோல் பங்கில் இரண்டு மணி நேரம் பொதுமக்கள் பெட்ரோல் போட முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர் இதனால் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    naam tamilar party member Argument with Kanchipuram petrol bunk staff for fill 47 liters of petrol for a car with a capacity of 45 liters.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X