காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அத்திவரதர் விழாவில் தொடரும் உயிரிழப்புகள்.. இன்று ஒரு முதியவர் பலி.. மக்கள் அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கானேர் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி நேற்று 4 பேர் உயிரிழந்த நிலையில், இன்று முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்திவரதர் தரிசனம் செய்து விட்டு திரும்பிய 72 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம், தரிசனம் செய்து விட்டு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

A 72-year-old man dies after Athi varadar darshan returning from kanchipuram

வரதராஜ பெருமாள் கோவிலின் தெப்பக்குளத்தில் வைக்கப்படும் அத்தி வரதர் சிலை, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் எடுக்கப்பட்டு, 48 நாட்களுக்கு பூஜை செய்யப்படும். பின்னர் மீண்டும் அத்தி வரதர் சிலை நீருக்கடியில் வைக்கப்படும்.

ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த உற்வத்தின் 18வது நாளான நேற்று, கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பிரதமர் வரவுள்ளதால் பொது தரிசனம் ரத்து செய்யப்படும் என வதந்தி பரவியதாலும், வார இறுதியில், கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதாலும், நேற்று ஏராளமான பக்தர்கள், அத்திவரதரை தரிசிக்க,காஞ்சிபுரத்தில் குவிந்தனர்.

இதனால், எதிர்பாராத அளவில் கூட்டம்அலைமோதியது. கூட்டத்தில் சென்ற பலருக்கு, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. வயதானவர்கள் பலர் செய்வதறியாது தவித்தனர். தரிசனத்தை முடித்து திரும்பிய கூட்டத்தில், சிலர் ஆங்காங்கே மயங்கி விழுந்தனர்.

அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சென்னையை சேர்ந்த நாராயணி, ஆந்திராவை சேர்ந்த கங்காலட்சுமி ஆகிய 2 பெண்களும், சென்னையை சேர்ந்த நடராஜன் மற்றும் ஆனந்த் ஆகியோர் உயிர் இழந்தனர். இந்தநிலையில், 19 வது நாளான இன்று, அத்திவரதரை தரிசித்து விட்டு திரும்பிய முதியவர் உயிரிழந்துள்ளார்.

English summary
kanchipuram: A 72-year-old man dies after Athi varadar darshan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X