• search
காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக சீனியர்கள் அப்செட்டில் இருக்காங்க.. துறைகளை மாற்றி கொடுக்கலாம்.. கொளுத்திப்போட்ட ஜெயக்குமார்!

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம் : திமுகவில் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப் படுத்துவதற்காக சீனியர்கள் வெளியேற்றப்படுவதால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கட்சி நிர்வாகியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம், முதல்வர் ஸ்டாலின் எந்த மதத்திற்கும் திமுக எதிரி இல்லை என்று பேசியிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஆ.ராசாவை கூப்பிட்டு முதல்வர் கண்டித்துள்ளாரா? எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒருபக்கம் நாங்கள் இந்து மதம் உட்பட எந்த மதத்திற்கும் எதிரி இல்லை என்றும், ஆன்மீகத்துக்கு எதிரானவர்கள் இல்லை என்றும் பேசிவிட்டு, மறுபக்கத்தில் இதற்கு எதிராக பேசுகிறவர்களைக் கண்டிக்காமல் ஊக்கப்படுத்துகிறார் என விமர்சித்தார்.

அதே 2.. ஓபிஎஸ் போட்ட பிளான்.. பதவிக்காக தினகரன் காலில் விழுந்தார் - பற்றவைத்த ஜெயக்குமார்! அதே 2.. ஓபிஎஸ் போட்ட பிளான்.. பதவிக்காக தினகரன் காலில் விழுந்தார் - பற்றவைத்த ஜெயக்குமார்!

மையமாக தமிழ்நாடு

மையமாக தமிழ்நாடு

காஞ்சிபுரம் அதிமுக மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரின் வணிக வளாக திறப்பு விழா உத்திரமேரூரில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் மையமாக தமிழ்நாடு செயல்படுகிறது. இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு கஞ்சா இங்கு புழக்கத்தில் உள்ளது.

கண்டிக்காமல்

கண்டிக்காமல்

தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒருபக்கம் நாங்கள் இந்து மதம் உட்பட எந்த மதத்திற்கும் எதிரி இல்லை என்றும், ஆன்மீகத்துக்கு எதிரானவர்கள் இல்லை என்றும் பேசிவிட்டு, மறுபக்கத்தில் இதற்கு எதிராக பேசுகிறவர்களைக் கண்டிக்காமல் ஊக்கப்படுத்துகிறார். எந்த மதத்தையும் இழிவுபடுத்தினால், நான் விடமாட்டேன், அவர்களது பதவியை பறித்துவிடுவேன். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றெல்லாம் கூறாமல், முதல்வர் பத்திரிகைகளில் செய்தி வரவேண்டும் என்பதற்காக மட்டும் பேசினால் போதுமா?

மன வேதனையோடு

மன வேதனையோடு

திமுக அரசு தெளிவில்லாத அரசாக உள்ளது. திமுக அமைச்சர்கள் மக்களை தரக்குறைவாகவும், அவமதிக்கும் வகையில் பேசுவது தொடர்கதையாகி வருகிறது. மக்கள் எள்ளி நகையாடும் வகையில் தான் இந்த அரசு செயல்படுகிறது. பெண்களுக்கு இலவச பேருந்து என்பதை அமைச்சர்கள் கேவலப்படுத்தி வருகின்றனர். இதனால் பெண்கள் மனவேதனையோடு கூனிக்குறுகி பேருந்தில் ஏறும் நிலை ஏற்பட்டுள்ளது.

 அநாகரிகம்

அநாகரிகம்

மக்களுக்கான இலவச திட்டங்களை விலையில்லா திட்டங்கள் என்று அறிவித்தவர் ஜெயலலிதா. யார் மனதும் புண்படாமல் பெயரிட்டு வழங்கி நாங்கள் பேசி வந்தோம். இப்போது தமிழக அமைச்சர்கள் அநாகரிகமான வார்த்தைகளை மேடையிலே பேசி அதன் மூலம் அனைத்து தரப்பினரையும் மன வருத்தம் அடைய செய்கின்றனர். இது அவர்களின் அநாகரிகமான பண்பை வெளிப்படுத்துகிறது. நாகரீகமான அரசு அதிமுக அரசு, அநாகரிகமான அரசு திமுக அரசு.

துறையை மாற்றிவிடலாம்

துறையை மாற்றிவிடலாம்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு மாரத்தான் துறை அமைச்சர் என்று ஒரு துறையை ஏற்படுத்தி கொடுத்தால் நல்லது. அதுபோல பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற அமைச்சர் என்று துறையை மாற்றி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று விமர்சனம் செய்தார்.

சீனியர்கள் அதிருப்தி

சீனியர்கள் அதிருப்தி

திமுக அரசு நடத்திய விழாவை திமுக அமைச்சரே புறக்கணித்தார் என்றால் அது மா.சுப்பிரமணியன் தான். திமுகவில் சீனியர்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். துரைமுருகன் அதிருப்தியில் உள்ளார். எப்படி மு.க.ஸ்டாலினை கொண்டுவர, கருணாநிதி வைகோவை வெளியேற்றினாரோ அதுபோல உதயநிதியை கொண்டுவர சீனியர்கள் அனைவரையும் வெளியேற்றி வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

English summary
All seniors in DMK are unhappy. DMK seniors are being expelled to promote Udhayanidhi Stalin in DMK. : says Former AIADMK minister Jayakumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X