காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆனி கருட சேவை இன்று... அத்தி வரதர் தரிசனம் மாலை 5 மணி வரை மட்டுமே

Google Oneindia Tamil News

Recommended Video

    காஞ்சிபுரம் : அத்திவரதரை தரிசனம் செய்ய வரும் மோடி.. காஞ்சியில் பரபரக்கும் ஏற்பாடுகள்

    காஞ்சிபுரம்: ஆனி கருட சேவை நடைபெறுவதால் இன்று காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதர் தரிசனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கி விமரிசையாக தொடங்கியது. 40 ஆண்டுகளுக்கு பின், இந்த வைபவம் நடைபெறுவதால், அத்தி வரதரை தரிசிக்க, உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.

    Athi Varadar Darshan: Aani Garuda Seva will be held Untill 5 pm

    காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவம் இன்று 11 வது நாளை எட்டியுள்ளது. இன்று ஆனி கருட சேவை நடைபெறுவதால் அத்திவரதரைக் காண பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு காத்துள்ளனர். அத்திவரதர் உற்சவம் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சென்னை ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி இடையே ரயில் பாதை.. ரயில்வே அமைச்சர் பதில் சென்னை ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி இடையே ரயில் பாதை.. ரயில்வே அமைச்சர் பதில்

    பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால், அத்திவரதரை தரிசிக்க காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இருந்த தரிசன நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், இன்று ஆனி கருட சேவை நடைபெறுவதால் இன்று காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதர் தரிசனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 1,500 போலீசார், சுழற்சி முறையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் மயங்கி விழுவோருக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தி வரதர் வைபவம் துவங்கிய நாள் முதல், தரிசனம் தொடர்பான நடைமுறைகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது.

    English summary
    Athi Varadar Darshan: Aani Garuda Seva will be held from 5 am to 5 pm only today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X