காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அத்தி வரதரை தரிசிக்க கூட்ட நெரிலை பற்றி கவலைப்படாமல் குவியும் மக்கள்... நெகிழ வைக்கும் காரணம்

Google Oneindia Tamil News

Recommended Video

    காஞ்சிபுரம்: கலைக்கட்டிய அத்திவரதர் திருவிழா... பக்தர்கள் சாமி தரிசனம்....

    காஞ்சிபுரம்: அத்தி வரதரை வாழ்வில் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் அலைஅலையாய் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் மூலவரான அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்த சரஸ் குளத்தில் இருந்து வெளியே வந்து 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    Athi varadar darshan: devotees crowd increased in kanchipuram

    இதன்படி கடந்த 1979ம் ஆண்டு அத்தி வரதர் விழா நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி அத்தி வரதர் விழா தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 17ம் தேதி வரை அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

    40 வருடத்துக்கு ஒருமுறை வரும் அத்தி வரதரான பெருமாளை வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசித்துவிட வேண்டும் என எண்ணி உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் காஞ்சிபுரம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

    தங்கள் வாழ்நாளில் இன்னொரு முறை அத்தி வரதரை தரித்துவிட வேண்டும் என்று கருதி வரும் பக்தர்களுக்கு கூட்ட நெரிசல், கால தாமதம் ஏதுவும் பெரிதாக தெரியவில்லை. இதனால் கடந்த சில நாள்களாக அளவுக்கு அதிகமான மக்கள் திரண்டு வருகிறார்கள்.

    வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர் மக்களுக்க அருள் பாலிக்க உள்ளார். தற்போது வரை சயன கோலத்தில் (படுத்த கோலத்தில்) அருள் பாலித்தார். இதனால் நின்ற கோலத்தில் அத்தி வரதரை காண , ஏற்கனவே தரிசனம் செய்த பலரும் மீண்டும் தரிசிக்க விரும்புகிறார்கள். எனவே ஆகஸ்ட் 1 முதல் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

    English summary
    Athi varadar darshan: devotees crowd increased in kanchipuram, behind the reasons
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X