காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரை மணி நேரத்தில் அத்தி வரதர் தரிசனம்.. எப்படி சாத்தியமானது?

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆகஸ்ட்1 முதல் நின்ற கோலத்தில் அருள் பாலிப்பார்..! அத்திவரதரை தரிசித்த முதல்வர் பேட்டி..

    காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், அத்தி வரதரை தரிசிக்கும் கூட்டம் நேற்று குறைந்து காணப்பட்டதால், பக்தர்கள் அரை மணி நேரத்தில், சாமி தரிசனம் செய்ய முடிந்தது.

    காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில், வசந்த மண்டபத்தில் அத்தி வரதர் தரிசனம் அளித்து வருகிறார். அத்தி வரதரை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் என லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வருகை தருகிறார்கள்.

    இந்த நிலையில் விஐபி தரிசன வழியில், பக்தர்களை அழைத்துச் சென்றதில் குளறுபடிகள் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, விஐபி தரிசன வழியில், செல்வோரை வருவாய் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்கள்.

    ஜக்கம்மா சொல்றா.. உதய சூரியனுக்கு ஓட்டு போடுங்க.. அப்பத்தான் குடும்பம் நல்லா இருக்கும்.. அடேங்கப்பா! ஜக்கம்மா சொல்றா.. உதய சூரியனுக்கு ஓட்டு போடுங்க.. அப்பத்தான் குடும்பம் நல்லா இருக்கும்.. அடேங்கப்பா!

    முக்கிய நபர்கள்

    முக்கிய நபர்கள்

    இந்நிலையில், நேற்று முன்தினம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால், பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. நேற்று காலை முதலே, பொது தரிசனத்தில் சென்றவர்கள், அரை மணி நேரத்தில் சாமி தரிசனம் முடிந்து வெளியில் வந்ததாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். நேற்றும் விஐபிகள் சிலர் தரிசனத்திற்கு வருவதாக பரவிய தகவலால் பொதுவான பக்தர்கள் அதிகம் பேர் வரவில்லையாம்.

    கெடுபிடி

    கெடுபிடி

    இதேபோல விஐபிகள் செல்லும் வழியில் கெடுபிடி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒருவரிடமே பலரும் பல முறை சிபாரிசு பெற்று விஐபி தரிசனம் வழியாக செல்வதை தடுக்க, யார் மூலம், எத்தனை பேர் தரிசனத்திற்கு அழைத்து செல்கின்றனர் என்று விவரம் சேகரிக்கப்படுகிறது. எனவே, விஐபிகள் வழியிலும் கூட்டம் குறைந்ததாம்.

    ஆடிப்பூரம்

    ஆடிப்பூரம்

    மற்றொரு காரணம் ஆடிப்பூரம் ஆகும். இன்று முதல் ஆகஸ்ட் 4ம் தேதிவரை ஆடிப்பூரம் உற்சவம் நடைபெறும். மாலை, 6:00 மணிக்கு உற்சவர் புறப்பாடு நடைபெறுகிறது. எனவே, ஆடிப்பூரம் உற்சவம் காணவும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நேற்று கூட்டம் குறைவாக இருந்ததாம்.

    கோரிக்கைகள்

    கோரிக்கைகள்

    அத்தி வரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும், பாதுகாப்புக்கு துணை ராணுவத்தினரை வரவழைக்க வேண்டும் என்றும், கோரிக்கைகள் வலுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Athi Varadar Darshan is become easy on Wednesday as many devotees have a plan to comes to the Temple on coming days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X