காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விடுமுறை நாளான இன்று நீண்ட வரிசை... அத்தி வரதரை தரிசிக்க நள்ளிரவு முதல் குவிந்த பக்தர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    அத்திவரதரை இடமாற்றம் : ஆகம விதிமுறைகளை பின்பற்றப்படும்- வீடியோ

    காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் அத்திவரதர் இன்று இளம் நீல நிற பட்டாடையில் காட்சியளிக்கிறார். விடுமுறை நாளான இன்று சுவாமியை தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த 27 நாட்களாக விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஏறத்தாழ 36 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்.

    Athi Varadar Darshan to concentrate devotees from midnight

    நள்ளிரவு 12 மணி முதலே, சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் நீண்ட தூரத்தில் 4 மணி நேரமாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வயதானோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் விரைந்து தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    என்னாது பாஜகவுக்கு ஆதரவா?.. நானா?.. ச்சே ச்சே அதெல்லாம் நம்பாதீங்க!.. குமாரசாமி விளக்கம்என்னாது பாஜகவுக்கு ஆதரவா?.. நானா?.. ச்சே ச்சே அதெல்லாம் நம்பாதீங்க!.. குமாரசாமி விளக்கம்

    இதனிடையே, விஐபி-களின் வருகை அதிகரிப்பால் பொதுமக்கள் தரிசனம் பாதிக்கப்படுவதாகவும் போலீசாரின் கெடுபிடி அதிகரித்திருப்பதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

    அத்தி வரதரை காண வந்த பக்தர்கள் 6 தற்காலிக உண்டியல்களில் 1 கோடியே 95 ஆயிரம் ரூபாயை காணிக்கையாக செலுத்தி உள்ளதாக இணை ஆணைய‌ர் செந்தில் வேலவன் தகவல் தெரிவித்துள்ளார்.

    English summary
    Long line.. Athi Varadar Darshan to concentrate devotees from midnight
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X