காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஞ்சியில் அத்தி வரதர் வைபவம்... ரவிசங்கர் பிரசாத், தமிழிசை தரிசனம்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம் : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர், காஞ்சிபுரம் அத்தி வரதர் கோயிலில் தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த திங்கட்கிழமையன்று அத்தி வரதர் வைபவம் துவங்கியது. 40 ஆண்டுகளுக்கு பின், இந்த வைபவம் நடைபெறுவதால், அத்தி வரதரை தரிசிக்க, உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.

Athi Varadar Darshan: Union Minister Ravi Shankar Prasad and BJP State President Tamilisai Soundararajan visit

கடந்த 6 நாட்களில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 7ஆம் நாளான இன்று, பெருமாளுக்கு மஞ்சள் பட்டு உடுத்தி, தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விடுமுறை தினம் என்பதால், ஆந்திரா,கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே, கோயிலுக்கு வந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சால்வை அணிவித்து வரவேற்கப்பட்டார். பெருமாளை வணங்கி அவர் ஆசிபெற்றார். இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

40 வருடங்களுக்கு ஒருமுறை 48 நாட்கள் காட்சியருளும் காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவ தரிசனத்தில் கலந்துகொண்டு அத்திவரதரை தரிசனம் செய்தேன். மரியாதைக்குரிய மத்திய அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத் அவர்களும் அத்திவரதரை தரிசனம் செய்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Union Minister Ravi Shankar Prasad and BJP State President Tamilisai Soundararajan also visited the Kanchipuram Athi Varadar Temple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X