காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளை முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர்.. அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்தின் 31-வது நாளான இன்று மஞ்சள் நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சியளிக்கிறார். அதிகாலை முதலே பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

அத்திவரதர் சயன கோலத்தில் காட்சியளிப்பது இன்றுடன் கடைசி நாளாகும். நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை அத்தி வரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, இன்று (ஜூலை 31) பொது தரிசனத்தில் நுழைவுவாயில் நண்பகல் 12 மணி அளவில் மூடப்படுகிறது.

Athi varadar in standing posture, devotees gathering

அதன்பின்னர் கோயில் வளாகத்திற்குள் இருக்கக்கூடிய பக்தர்கள் மட்டும் மாலை 5 மணிவரை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் விஐபி வரிசையில் வரக்கூடிய பக்தர்கள் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்து அறநிலையத் துறை சார்பாக ஏற்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய ஆன்லைன் பாஸ் வைத்திருப்பவர்கள் நண்பகல் 12 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாளை (ஆகஸ்ட் 1) வழக்கம் போல் காலை 5 மணியிலிருந்து அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பக்தர்களின் கூட்டம் அலைமோதும் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

English summary
Kanchipuram Athi varadar in standing posture, Pilgrims gathering. Increases security arrangements
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X