காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீண்டும் குளத்திற்கு செல்லும் அத்திவரதர்.. இன்றுடன் நிறைவு பெறும் தரிசனம்.. அலைமோதும் கூட்டம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Athivaradhar Temple | ஒரே நாளில் 5 லட்சம் பேர் தரிசனம்..வியக்க வைக்கும் அத்தி வரதர்!- வீடியோ

    காஞ்சிபுரம்: அத்திவரதர் கோவிலில் இன்றுடன் தரிசனம் முடிவடைகிறது. இதனால் அங்கு அதிக அளவில் மக்கள் கூடி வருகிறார்கள்.

    தமிழகத்தில் தற்போது வைரல் ஹீரோ அத்திவரதர்தான். காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர் இந்தியா முழுக்க பிரபலம். கடந்த 48 நாட்களாக அத்திவரதர்தான் தமிழகம் முழுக்க வைரலாக இருந்தார்.

    கடந்த ஜூலை 1-ம் தேதி குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை தற்போது நாடு முழுக்க பிரபலமாகி உள்ளது. 40 வருடங்களுக்கு ஒருமுறை இந்த அத்திவரதர் சிலை வெளியே எடுக்கப்படும். கடந்த முறை அத்திவரதர் சிலை எடுக்கப்பட்ட போது கூட இவ்வளவு வைரலாகவில்லை.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இந்த முறை உலகம் முழுக்க இந்த கோவில் வைரலாகி உள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இவர் எழுந்தருளுவார் என்பதால், இவரை தரிசிக்க பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் தினமும் பக்தர்கள் வருகிறார்கள். முக்கிய அரசியல் தலைவர்கள், கட்சியினர், பிரபலங்கள் கூட இங்கு வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    எத்தனை இருந்தது

    எத்தனை இருந்தது

    நேற்று இந்த கோவிலில் தரிசனம் இரவுக்கு மேல் மட்டுமே நடந்தது. கடந்த 46 நாட்களாக நடைபெற்று வரும் காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பல லட்சம் மக்கள் தினமும் தரிசனம் செய்து வருகிறார்கள். தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 10-15 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். ஆனால் போக போக தினமும் ஒரு லட்சம் பேர் வரை அந்த கோவிலில் தரிசனம் செய்தனர்.

    மீண்டும் நடக்கிறது

    மீண்டும் நடக்கிறது

    முதலில் அத்திவரதர் மக்களுக்கு படுத்த நிலையில் காட்சி அளித்தார். கடந்த 1ம் தேதியில் இருந்து அவர் நின்ற நிலையில் காட்சி அளித்து வருகிறார். இந்த சிலை இன்று மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது . 48-வது நாளான இன்று அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது.

    எப்படி

    எப்படி

    நள்ளிரவில் இருந்து காத்திருந்து தரிசனம் செய்யும் மக்கள், பல மணி நேரங்கள் வரிசையில் நிற்கவும் தயாராக இருக்கிறார்கள். மிக முக்கியமாக விழா நாட்களில், ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவில் மக்கள் கோவிலில் தரிசனம் செய்கிறார்கள்.

    மரணம்

    மரணம்

    இந்த கோவிலில் வரிசையில் நின்று வயோதிகம், மோசமான உடல்நிலை காரணமாக சிலர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். சில இளைஞர்கள், விஷமிகளுக்கு இடையில் இங்கு சண்டை வந்துள்ளது. காஞ்சிபுரம் ஆட்சியர் இங்கு போலீஸ் அதிகாரிகளை மோசமாக திட்டியதும் பெரிய சர்ச்சையானது. இதுபோன்ற காரணங்களாக மாதம் முழுக்க அத்திவரதர் டிரெண்டிங்கிலேயே இருந்தார்.

    எவ்வளவு தெரியுமா

    எவ்வளவு தெரியுமா

    கடைசி 10 நாட்களில் தினமும் 2-3 லட்சம் பேர் கோவிலில் தரிசனம் செய்கிறார்கள். கடந்த வாரம் ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க குவிந்தனர். இரவு 7 மணி வரை 3 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். இதனால் கடந்த 46 நாட்களில் அத்திவரதர் கோவிலில் ரூ. 7 கோடியே 55 லட்ச ரூபாய் ரொக்க பணமாக உண்டியலில் போடப்பட்டுள்ளது.

    என்ன தங்கம்

    என்ன தங்கம்

    96.7 கிராம் தங்கமும், 2812 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். அத்திவரதர் கோவிலில் இன்றுடன் தரிசனம் முடிவடைகிறது. இதனால் அங்கு அதிக அளவில் மக்கள் கூடி வருகிறார்கள்.

    எல்லாம் முடிகிறது

    எல்லாம் முடிகிறது

    48 நாட்கள் நிறைவு பெறும் நிலையில் இன்றோடு தரிசனம் முடிகிறது.இன்று அத்திவரதர் கோவிலில் ஸ்பெஷல் வரிசை கிடையாது. பொது வரிசை மட்டுமே உள்ளது. மக்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளார் .

    English summary
    Kancheepuram Athi Vardar temple Darshan will be closed from today for the next 40 years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X