காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று ஆண்டாளுக்கு திருக்கல்யாணம்.. அத்திவரதர் தரிசனம் நேரத்தில் மாற்றம்!

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: ஆடிப்பெருக்கையொட்டி இன்று ஆண்டாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனால் அத்திவரதர் தரிசனம் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த வைபவம் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த ஜூலை 1 முதல் அனந்தசயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

Athivaradhar Darshan stops today ahead of Aadi Pooram

இதுவரை 43 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இன்று ஆடிப்பெருக்கும் ஆடிப்பூரமும் கொண்டாடப்படுகிறது. இதனால் வரதராஜ பெருமாள் கோயிலில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை செய்ய வசதியாக பிற்பகல் 2 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்திவரதர் தரிசனம் மாலை 5 மணியுடன் நிறுத்தப்படுகிறது. திருக்கல்யாணத்துக்கு பிறகு இரவு 8 மணி முதல் 10 மணி வரை தரிசனம் நடைபெறும் என மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

English summary
District Administration announces that Athivaradhar Darshan stops today ahead of Aadi Pooram for certain hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X