காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அலைமோதி அல்லோகலப்படும் பக்தர்கள்.. வசந்த மண்டபத்திலிருந்து ஷிப்ட் ஆகிறார் அத்திவரதர்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: பொதுமக்கள் அத்திவரதரை எந்த வித சிரமமின்றி தரிசனம் செய்ய வசந்த மண்டபத்திலிருந்து அவர் வேறு இடத்திற்கு இடம் மாறுகிறார்.

காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அந்த வைபவம் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. கடந்த 20 நாட்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறுகிறது.

வெறும் 48 நாட்கள் மட்டுமே அத்திவரதர் காட்சி அளிப்பார் என்பதாலும் அதன்பிறகு அவர் மீண்டும் குளத்திற்கே சென்றுவிடுவதாலும் அவரை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என பொதுமக்கள் ஏராளமானோர் குழுமுகின்றனர்.

வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்! வேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்!

காரணம்

காரணம்

கடந்த வியாழக்கிழமை திருவோணம் நட்சத்திரம் என்பதால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கோயிலில் திரண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 4 பேர் பலியாகிவிட்டனர். நேரடியாக அத்திவரதரை பார்க்க விடாமல் மாவட்ட நிர்வாகத்தினர் கோயிலை சுற்றவிட்டு பக்தர்களை அலைக்கழிப்பதே அங்கு தேங்கும் கூட்டத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

ஆலோசனை

ஆலோசனை

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையும் ஒரு பக்தர் உயிரிழந்துவிட்டார். இதனால் தரிசனத்தை இன்னும் எளிமைப்படுத்த மக்கள் சார்பில் கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்து அறநிலைய துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

உத்தரவு

உத்தரவு

அப்போது வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு உணவளிப்பது, குடிநீர் ,கழிப்பறைகளை அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இன்றைய தினம் தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

தரிசனம்

தரிசனம்

இந்த நிலையில் வசந்த மண்டபத்தில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்ய கிழக்கு கோபுர வாசலில் இருந்து 10 முத்ல 15 வரிசைகள் இருக்கின்றன. இதை கஷ்டப்பட்டு கடந்து சென்றாலும் தரிசனம் உடனடியாக கிடைப்பதில்லை. மேலும் சில வரிசைகளை கடந்தால் மட்டுமே வசந்த மண்டபத்தை அடைய முடியும். உணவில்லாமல் வரும் பக்தர்கள் சர்க்கரை அளவு குறைந்து மயங்கி விழுகின்றனர். இதை தடுக்கவும் பக்தர்களை சுற்றவிடாமல் தரிசனம் செய்ய வைக்கவும் கோரிக்கைகள் எழுந்தன.

பக்தர்களுக்கு காட்சி

பக்தர்களுக்கு காட்சி

இந்த நிலையில் வசந்த மண்டபத்திலிருந்து அத்திவரதரை வெளியே கொண்டு வந்து வைக்க அறநிலைய துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர். இதனால் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அத்திவரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என தெரிகிறது.

English summary
Athivaradhar is going to shift from Vasantha Mandap to some other open place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X