காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் நிறைவு.. 2059ம் ஆண்டு மீண்டும் தரிசனம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அத்திவரதர் தரிசனம் நிறைவு.. 2059ம் ஆண்டு மீண்டும் தரிசனம்!

    காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனம் முடிவடைந்ததால் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறார். முன்னதாக, உற்சவரை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் பள்ளிக் கொண்டுள்ளார். இவர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சியளிக்கிறார்.

    அந்த வகையில் கடைசியாக 1979-ஆம் ஆண்டு காட்சியளித்த அவர் 40 ஆண்டுகள் கழித்து இந்த 2019-இல் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் காட்சியளித்து வந்தார். மொத்தம் 48 நாட்கள் காட்சியளித்தார்.

    24 நாட்கள் நின்ற கோலம்

    24 நாட்கள் நின்ற கோலம்

    இதில் 24 நாட்கள் சயன கோலத்திலும் மீதமுள்ள 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சியளித்து வந்தார். இவரை காண வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் திரண்டனர். கடந்த 48 நாட்களில் அத்திவரதரை 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தரிசனம் செய்தனர். இந்த 48 நாட்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தும், கூட்ட நெரிசலால் வீடு திரும்பியும் உள்ளனர். 48 நாட்களாக 48 வகையான உணவு பொருட்கள் நிவேதனம் செய்யப்பட்டன.

    பக்தர்கள்

    பக்தர்கள்

    இந்த நிலையில் இன்று முடிவடைய வேண்டிய அத்திவரதர் தரிசனம் கடும் கூட்டநெரிசல் காரணமாக நேற்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக கட்டுக்கடங்காத கூட்டம் அதிகரித்தது. மேலும் திருப்பதி போல் காத்திருப்பு அறைகளை உருவாக்கி அதில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு அனுப்பப்பட்டு வந்தனர்.

    2059-ஆம் ஆண்டு மீண்டும்

    2059-ஆம் ஆண்டு மீண்டும்

    அத்திவரதரை மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யாததால் அவரது வைபவத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வழக்கு தொடர்ந்த நிலையில் அதற்கு அரசு மறுப்பு தெரிவித்ததால் நேற்றுடன் அத்திவரதர் தரிசனம் முடிவடைந்துவிட்டது. இத்தோடு 2059-ஆம் ஆண்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அத்திவரதரை மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யாததால் அவரது வைபவத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வழக்கு தொடர்ந்த நிலையில் அதற்கு அரசு மறுப்பு தெரிவித்ததால் நேற்றுடன் அத்திவரதர் தரிசனம் முடிவடைந்துவிட்டது.

    அனந்தசரஸ் குளம்

    அனந்தசரஸ் குளம்

    அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று அதிகாலை அத்திவரதருக்கான பரிகார பூஜைகள் தொடங்கின. அந்த சிலை அடுத்த 40 ஆண்டுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தைலக்காப்பு பூசப்பட்டு குளத்தில் வைக்கப்படுகிறார். பின்னர் நீர் நிரப்பப்படும். தலைமாட்டில் 5 தலை நாகங்களுடன் கருங்கற்களால் ஆன ஆன கட்டிலில் அத்திவரதர் சயன கோலத்தில் வைக்கப்படுகிறார். அவரை சுற்றி 16 நாகங்கள் காவல் காப்பது போல் சிலைகள் வைக்கப்படும். முன்னதாக மாலை 5 மணிக்கு உற்சவரை அத்திவரதர் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    English summary
    Athivaradhar is to be kept in Ananthasaras Pool as 48 days of darshan completed yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X