காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் அருகே போலீஸை கண்டித்து ஷேர் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் அருகே போலீஸை கண்டித்து ஷேர் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் நடைபெறும் இடம் அருகே போலீஸை கண்டித்து ஷேர் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பிரசித்தி பெற்ற வைபவமான அத்திவரதர் தரிசனம் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த வகையில் இந்த வைபவம் கடந்த 1979-இல் நடந்தது.

அச்சமயம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த வைபவத்துக்காக காஞ்சிபுரம் மட்டுமல்லாது வெளிமாநில பக்தர்களும் காத்திருந்தனர்.

அனந்தசயனம்

அனந்தசயனம்

இந்த ஆண்டு அத்திவரதர் தரிசனத்துக்காக அவரது 12 அடி சிலை குளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனந்தசயன கோலத்தில் காட்சி அளித்து வருகிறார்.

தரிசனம்

தரிசனம்

அத்திவரதர் வைபவத்துக்காக 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியது. இதற்காக போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் அத்திவரதரை லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்துள்ளனர்.

பெட்ரோல்

பெட்ரோல்

இந்த நிலையில் அத்திவரதர் வைபவம் நடைபெறும் இடம் அருகே ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமாரை போலீஸார் அனுமதிக்கவில்லை. அவரிடம் அனுமதி சீட்டு இருந்தும் அவரை போலீஸார் அனுமதிக்காததை கண்டித்து அத்திவரதர் வைபவம் நடைபெறும் இடம் அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

பரபரப்பு

பரபரப்பு

இதையடுத்து தீக்காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை மீட்ட போலீஸார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீஸாரை கண்டித்து ஷேர் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Auto Driver self immolated near Aththi Varadhar vaibhavam against police who didnt allow his vehicle though he had permission letter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X