காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டீ குடித்து கொண்டிருந்தவர்.. வேகமாக வந்த லாரி டயரில்.. திடீரென போய் விழுந்து.. ஷாக் சிசிடிவி வீடியோ!

ஓடும் லாரியில் விழுந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: டீ குடித்து கொண்டிருந்தவர்.. வேகமாக வந்த லாரியின் டயருக்குள் திடீரென ஓடிப்போய் படுத்து கொண்டார்.. இதில், லாரி சக்கரம் உடல் மீது ஏறி உயிரிழந்து விட்டார்.. இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மேத்தா நகரைச் சேர்ந்தவர் ராஜி.. இவர் ஒரு ஆட்டோ டிரைவர்.. இன்று டீ குடிப்பதற்காக குன்றத்தூர் - அனகாபுத்தூர் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி, ராஜி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

புதிய டுவிஸ்ட்... ஈரானின் சபாஹர் ரயில் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்.. இந்தியா அதிரடிபுதிய டுவிஸ்ட்... ஈரானின் சபாஹர் ரயில் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்.. இந்தியா அதிரடி

 சிசிடிவி கேமிரா

சிசிடிவி கேமிரா

இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தெரிவிக்கப்படவும், அவர்கள் விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர்.. மேலும் இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அங்கிருந்த சிசிடிவி கேமிராவையும் ஆய்வு செய்தனர். அப்போது அந்த காட்சியை கண்டு போலீசாரே அதிர்ந்துவிட்டனர்.

 20 சக்கர லாரி

20 சக்கர லாரி

ரோட்டோரம் ராஜி நின்று கொண்டிருக்கிறார்.. பிறகு அங்கும், இங்கும் நடந்து கொண்டே இருக்கிறார்.. படபடப்புடன் காணப்படுகிறார்.. அப்பொழுது அந்த வழியாக ஒரு லாரி வருகிறது... அது 20 சக்கரம் கொண்ட லாரி.. அந்த லாரியை பார்த்ததும், ஓடிபோய் லாரியின் அருகில் சென்று, பின்னால் உள்ள லாரியின் சக்கரத்துக்கு நடுவில் தானாக போய் படுத்து கொள்கிறார்.. அந்த லாரியின் சக்கரம் இவர் மீது ஏறி இறங்கியதில் அங்கேயே உடல்நசுங்கி உயிரிழக்கிறார்.. இந்த காட்சி அங்கு பதிவாகி உள்ளது.

தற்கொலை

தற்கொலை

ஆனால் பொதுமக்கள் இதை காலையில் பார்த்தவுடன், சாலை விபத்து, லாரி வந்து ஏறிவிட்டது என்றுதான் நினைத்தனர்.. இவராகவே ஓடிப்போய் படுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இதனை காணாத அப்பகுதி மக்கள் லாரி மோதி இறந்ததாக தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, விபத்து வழக்காக பதிவு செய்த போக்குவரத்து போலீசார் இந்த வழக்கை குன்றத்தூர் போலீசாருக்கு மாற்ற உள்ளனர்.

விசாரணை

விசாரணை

ராஜிக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. இப்போது ஊரடங்கினல் ஆட்டோ ஓட்டுகிறாரா? வாழ்வாதார பிரச்சனையா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமா? என்றெல்லாம் விசாரணைக்கு பிறகுதான் முழுமையாக தெரியவரும் என்கின்றனர் போலீசார்.. ஆனால் இந்த சம்பவம் குன்றத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது!

English summary
cctv footage has released on kancheepuram auto drivers suicide case issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X