காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீரென "மசூதி"யில் இருந்து வந்த சத்தம்.. டக்கென பேச்சை நிறுத்திய எடப்பாடியார்.. காஞ்சி தேரடியில்!

பிரச்சாரத்தின்போது பாங்கு சத்தம் கேட்டதால், தன் பேச்சை சற்று நேரம் நிறுத்தினார் முதல்வர்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: திடீரென கேட்ட பாங்கு சத்தத்தினால், தன்னுடைய பிரச்சாரத்தை டக்கென நிறுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மக்கள் கிராம சபையில் பேசும்போது, சசிகலா ரிலீஸ் ஆகி வந்ததும் அதிமுகவின் கதையை க்ளோஸ் பண்ணிவிடுவார் என்றார்.

CM Edapadi palanisami stop his campaign for muslims prayer in Kancheepuram

இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வாலாஜா பஸ் ஸ்டாண்டில், இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. இதுவரை தனது பிரச்சாரங்களில் ஸ்டாலினை மட்டுமே குறி வைத்து பேசி வந்த நிலையில், இன்று திடீரென சசிகலா பற்றியும் முதல்வர் பிரச்சாரத்தில் பேசியது ஆச்சரியத்தை தந்தது.

"ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையானாலும், தமிழகத்தில் அடுத்த முறையும் அதிமுக தான் ஆட்சியை பிடிக்கும்" என்று மு.க.ஸ்டாலினுக்கு மறைமுகமாக பதிலளித்தார். பிறகு, காஞ்சிபுரம் தேரடி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த போது, அங்கே பக்கத்தில் இருந்த மசூதியில் இருந்து திடீரென பாங்கு சத்தம் கேட்டது. அதையடுத்து, தனது பேச்சை நிறுத்திய எடப்பாடியார், பாங்கு சத்தம் நிற்கும் வரை அமைதி காத்து, அதற்கு பிறகே பிரச்சாரத்தை தொடந்தார்.

இதற்கு முன்பும், அதாவது கடந்த தேர்தலில் வாழப்பாடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வாக்கு சேகரிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.. அவர் பேசிக் கொண்டிருந்தபோது, மசூதியில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பாங்கு சத்தம் கேட்டது.. உடனே முதல்வர் தனது பேச்சை நிறுத்தி விட்டார்... தொழுகை முடிந்த பிறகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்..

இப்படித்தான் ஒருமுறை, அமைச்சர் ஜெயக்குமார் பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் ரொம்ப சீரியஸாக பேசி கொண்டிருந்தார்.. வேளாண் மசோதா விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு, பதில் சொல்ல தொடங்கும்போதே, திடீரென பாங்கு சத்தம் கேட்டது.. அப்போது பேச்சை நிறுத்திவிட்டு, அமைச்சர் ஜெயக்குமார் இரு கைகளையும் குவித்து தொழுகை செய்ய ஆரம்பித்து விட்டார்.. தொழுது முடித்துவிட்டு, கொஞ்ச நேரம் கழித்துதான், "வேளாண் மசோதா விவகாரத்தில் முதலமைச்சர் சொன்னதுதான், அதிமுகவின் நிலைப்பாடு" என்று பதில் சொன்னார்.

அமெரிக்க கலவரம்... வன்முறையாளர்களுடன் தொடர்பு... பாதுகாப்பு பணியிலிருந்து 12 பேர் அதிரடி நீக்கம்அமெரிக்க கலவரம்... வன்முறையாளர்களுடன் தொடர்பு... பாதுகாப்பு பணியிலிருந்து 12 பேர் அதிரடி நீக்கம்

ஆக, அதிமுக என்றில்லை எந்த கட்சி தலைவர்களாக இருந்தாலும், பாங்கு சத்தம் எங்கிருந்து கேட்டாலும், தங்கள் பேச்சை அதற்கு உரிய மரியாதையை தருவது இயல்பான ஒன்றாகும்.. இதில் ஜெயக்குமார் மட்டும்தான் ஆன் தி ஸ்பாட்டில் தொழுகையில் இறங்கியவர்!

English summary
CM Edapadi palanisami stop his campaign for muslims prayer in Kancheepuram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X