காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அலற விட்ட "சமையல்காரர்".. மொத்தம் 6 பேருக்கு தொற்று.. தீவிர கண்காணிப்பில் காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: சமையல்காரரால் நடுங்கி கொண்டுள்ளது காஞ்சிபுரம் மாவட்டம்.. இதுவரை 6 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால் மாவட்ட மக்கள் கிலியில் உள்ளனர்.. மொத்தம் 1,018 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக்குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்!!

Recommended Video

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா... 144 தடை நீட்டிக்கப்படுமா?

    ஆரம்பத்தில் ஈரோடு, சென்னை, மதுரை மாவட்டங்களே கொரோனா வைரஸ் பரவல் பாதித்த மாவட்டங்களாக கருதப்பட்டன.. சென்னைக்கு பக்கத்தில் இந்த மாவட்டம் இருந்தாலும் தொற்று என்பது பரவாமலேயே இருந்தது!

    ஆனால் டெல்லி மாநாடு விவகாரம் வெடித்தபிறகுதான், மாவட்டங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.. யாரெல்லாம் டெல்லி மாநாட்டுக்கு சென்றார்கள் என்றும் கண்டறியப்பட்டது.

    தனிமை

    தனிமை

    அதன்படி, மாநாட்டில் 16 பேர் கலந்து கொண்டுள்ளனர்.. இவர்கள் இந்தோனேசியா, மலேசியா நாடுகளை சேர்ந்தவர் ... காஞ்சிபுரம் தேரடி பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இவர்கள் தங்கியிருந்தனர். இதனை கண்டறிந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைத்தனர்.பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.. இப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    சீல் வைக்கப்பட்டன

    சீல் வைக்கப்பட்டன

    மீதமுள்ள 15 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை என ரிசல்ட் வந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர் வசித்த மசூதி அருகே உள்ள சுற்றுவட்டார பகுதிகளான விளக்கொளி பெருமாள் கோவில் தெரு, ரயில்வே ரோடு உள்ளிட்ட 40 இடங்களுக்கு தடுப்புகள் அமைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. அதனை சுற்றியுள்ள 19 வங்கி கிளைகளும் மூடப்பட்டுள்ளன.

    சமையல்காரர்

    சமையல்காரர்

    இதைதவிர மேலும் 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது ரத்த மாதிரிகளும் டெஸ்ட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இதே பள்ளி வாசலில் தங்கி, சமையல் வேலை செய்து வந்த சமையல்காரரான ஒருவருக்கும் அவருடைய உதவியாளருக்கும் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.. இவர்களை மருத்துவக்குழு கண்காணித்து வந்தது.

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம்

    2 பேரின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ததில் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து 2 பேரும் உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மசூதி சமையல்காரர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்.. இவர்கள் 2 பேரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும் மற்றவர்கள் பீதியில் உள்ளனர்.

    விண்ணப்பம்

    விண்ணப்பம்

    இப்போது மாவட்டத்தில் மட்டும் 1000-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று உள்ளவர்களிடம் 43 பேர் நெருங்கி பழகி உள்ளனர்... இவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் திருமணம், இறப்பு மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை போன்ற முக்கிய காரணங்களுக்காக மட்டும் பயணம் செய்ய வேண்டி இருந்தால் கலெக்டரின் அனுமதிக்காக https://kanchi.nic.in என்ற முகவரியில் இணையதளம் மூலமாகவோ அல்லது கைப்பேசி மூலமாகவோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

    பதற்றம்

    பதற்றம்

    மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் இயங்கிவந்த காய்கறி மார்க்கெட் வையாவூர், ஓரிக்கை பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.... 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன... 1600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு 6 பேருக்கு தொற்று என்ற தகவல் வந்தாலும், மக்கள் வெளியில் வருவதைக் குறைத்து கொள்வதில்லை என்று சொல்லப்படுகிறது... இதே நிலை நீடித்தால், காஞ்சிபுரம் நகரம் முழுவதும் முடக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

    English summary
    coronavirus: six confirmed people in Kancheepuram
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X