காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாமக-வின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிப்பதே திமுகவின் வேலை… ராமதாஸ் சொல்கிறார்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: பாமகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிப்பது தான் திமுகவின் வேலையாக உள்ளதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் தருமபுரியில் 3 நாட்கள் பிரச்சாரம் செய்துள்ளதால், அங்கு அன்புமணியின் வெற்றி உறுதியாகி விட்டதாக கூறினார்.

DMK Party Copy the PMK Election Manifesto says Ramadoss

சிறந்த மருத்துவமனை மற்றும் கல்லூரிகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் தேர்தலுக்கு பிறகு நிறைவேற்றப்படும் எனவும் ராமதாஸ் உறுதியளித்தார்.

நான் நர்மதா.. செருப்பை துடைச்சு தர்றேன்.. அவருக்கு மட்டும் ஓட்டு போடாதீங்க.. அதிரடி பிரச்சாரம்!நான் நர்மதா.. செருப்பை துடைச்சு தர்றேன்.. அவருக்கு மட்டும் ஓட்டு போடாதீங்க.. அதிரடி பிரச்சாரம்!

மேலும், தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் போன்றவை என விமர்சித்தார். தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை எனவும் வரும் தேர்தலுடன் தி.மு.க. எதிர்கட்சி என்ற அந்தஸ்தை கூட இழக்க போகிறது என்றும் ராமதாஸ் கூறினார்

தேர்தல் களமும், களச்சூழலும் நமக்கு ஆதரவாக உள்ளன என்று கூறியுள்ள ராமதாஸ், மக்களும் நமக்கு வாக்களிக்க விருப்பமாக உள்ளனர் என்றும், அதை உணர்ந்து அடுத்த 4 நாட்களுக்கு கடுமையாகவும், கவனமாகவும் உழைத்தால் 40 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நமக்கே வெற்றி. இது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.

English summary
Ramadoss Said that DMK Party Copy the PMK Election Manifesto
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X