காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஞ்சிபுரத்தில் வேட்டிய மடிச்சு கட்டி வயலில் இறங்கிய மு.க. ஸ்டாலின்!!

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: விவசாய மசோதாவை எதிர்த்து திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் இருக்கும் கீழ் அம்பியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு செல்லும் முன்பு கீழ் அம்பி என்ற இடத்தில் விவசாய நிலத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது, சகதி நிறைந்த வயலில் வேட்டியை மடித்துக் கொண்டு ஸ்டாலின் இறங்கினார். அங்கு பணியாற்றிக் கொண்டு இருந்த தொழிலாளர்களிடம் பேசினார்.

dmk protest: MK Stalin landed in the agri field in Kanchipuram

விவசாயத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அப்போது பேசி அறிந்து கொண்டார். அங்கு ஸ்டாலின் வயலில் இறங்கிக் கொண்டு இருக்கும்போது, சென்னையில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இருவரும் கலந்து கொண்டு இருந்தனர்.

dmk protest: MK Stalin landed in the agri field in Kanchipuram

தன்னை விவசாயி என்று முதல்வர் எடப்பாடி கூறிக்கொள்வது உண்டு. அதேசமயம், விவசாயம் குறித்து ஸ்டாலினுக்கு என்ன தெரியும் என்று கேள்வி எழுப்பி வந்தார். இந்த சூழலில்தான் இன்று விவசாய நிலத்தில் ஸ்டாலின் இறங்கினார். அப்போது ஸ்டாலின் பச்சை நிறத்தில் துண்டு அணிந்து இருந்தார். பச்சை நிற மாஸ்க்கும் அணித்து இருந்தார்.

dmk protest: MK Stalin landed in the agri field in Kanchipuram

இதற்குப் பின்னர் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின் மத்திய மாநில அரசுகளை கடுமையாக சாடினார். ஏழைத்தாயின் மகன் என்று கூறி கொண்டு பிரதமர் மோடி நாட்டில் ஏழைகளை உருவாக்கி கொண்டு இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறி விவசாயத்தை அழித்துக் கொண்டு இருக்கிறார். அவர் ஒரு விஷ வாயு'' என்றார்.

 விவசாயிகளை ஏமாற்றும் விஷ வாயுதான் எடப்பாடி... ஈடு இரக்கமற்றவர்... முக ஸ்டாலின் விளாசல்!! விவசாயிகளை ஏமாற்றும் விஷ வாயுதான் எடப்பாடி... ஈடு இரக்கமற்றவர்... முக ஸ்டாலின் விளாசல்!!

English summary
dmk protest: MK Stalin landed in the agri field in Kanchipuram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X