காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஊது.. ஊது.. ஊதுய்யா.." செம போதையில் கண்டக்டர், டிரைவர்.. தப்பித்த பயணிகள்

காஞ்சிபுரம் அருகே மதுபோதையில் பஸ் ஓட்டிய கண்டக்டர், டிரைவர் கைது செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    செம போதையில் கண்டக்டர், டிரைவர்.. தப்பித்த பயணிகள்

    காஞ்சிபுரம்: நடுரோட்டில் தாறுமாறாக பஸ் போவதை பார்த்தும், எல்லா பயணிகளும் குய்யோ முய்யோ என்று கூச்சலிட்டு, பதறி போய்விட்டனர்!

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சிக்கு அரசுபேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்ஸை துரைராஜ் என்பவர் ஓட்டி சென்றார். நிறைய பயணிகள் பஸ்ஸுக்குள் உட்கார்ந்திருந்தனர்.

    திடீரென பஸ் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. இதை பார்த்ததும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். டிரைவர் என்ன இப்படி ஓட்டுகிறாரே என்று கண்டக்டர் பிரபாகரனிடம் போய் சொன்னார்கள். அதற்கு கண்டக்டரோ, கெட்ட கெட்ட வார்த்தைகளில் பயணிகளை திட்ட ஆரம்பித்துவிட்டார்.

    Gov Bus Driver and Conductor arrested for Drunk and Drive near Kanchipuram

    இதைப் பார்த்ததும் பயணிகளுக்கு இன்னும் ஷாக் ஆகிவிட்டது. அந்த சமயத்தில் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது. எல்லா பயணிகளும் ஒன்று சேர்ந்து, கண்டக்டர், டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    என்ன ஏதென்று விசாரித்தபோதுதான், வண்டி தாறுமாறாக ஓடியது பற்றியும், தங்களை அவதூறாக திட்டியது பற்றியும் புகார் சொன்னார்கள். மேலும் இருவரையும் போலீசாரிடம் பயணிகளே ஒப்படைத்தனர்.

    ரவுடி வல்லரசு என்கவுண்டர்.. விசாரணையை தானே முன்வந்து கையில் எடுத்தது மனித உரிமை ஆணையம் ரவுடி வல்லரசு என்கவுண்டர்.. விசாரணையை தானே முன்வந்து கையில் எடுத்தது மனித உரிமை ஆணையம்

    உடனடியாக போலீசாரும், ஊதுகுழல் மூலம் பரிசோதனை கண்டக்டரையும் டிரைவரையும் சோதனை செய்தனர். ஊது.. ஊது.. ஊது.. ஊதிட்டே இரு.. போலீசார் சொல்லி கொண்டே இருந்தனர். சோதனை இறுதியில் ரெண்டு பேருமே செம போதையில் இருந்தது உறுதியான பின்னர், வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். அதன்பிறகு வேறு ஒரு பஸ் வரவழைக்கப்பட்டு, பயணிகளை போலீசார் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

    English summary
    Govt Bus Driver and Conductor was surrounded by the Passengers for his behavior near Kanchipuram
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X